Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

அறம்

அம்மா தாயே!

குரல் கொடுத்த
பிச்சைக்காரனை
விரட்டி விட்டு
பிள்ளைக்கு பாடம்
சொல்லித்தந்தாள்
அன்னை!
அறம் செய விரும்பு!

வேலை

உறவுகள் தொலைத்து

கனவுகள் சுமந்து
காற்றினில் கலந்து
எல்லைகள் கடந்து
வந்தேன் இங்கு...
கிடைத்தது என்னவோ
இலவச காற்று மட்டும்தான்


பறவையின் ஒலி

வீட்டுக் கதவு
திறந்து மூடும்போது
தவறாமல் ஒலிக்கிறது
அந்த மரத்தில்
எப்போதோ வாழ்ந்த
பறவையின்
'கி(ரீ)ச்.... கி(ரீ)ச்' சத்தம்!

தங்கை


அன்பு தங்கை என்று

ஒரு தேவதை

அன்புடன் இருந்தால்

இப்படித்தான் இருப்பாள்

என்ற எண்ணத்தை என்னுள்

விதைத்த இந்த ஆலமரம்

விழுது மண்ணில் விழுவதற்குள்

மறைந்து விட்டதே

சில மணி நேரங்களே

பேசியிருந்தாலும் அந்த

முகம் அறியாத பாச மலரை

மறக்க முடியவில்லை அன்பு

தங்கை நீ ஒவ்வொரு முறை

அழைக்கும் அண்ணா என்ற

அற்புதமான வார்த்தை

மரணநேரத்திலும் மறக்க முடியுமா

தங்க தாமரையே ஏன் என்னிடம்

இது வரை பேசவில்லை

உள்ளம் மட்டும் அல்ல

உடலும் சேர்ந்து வாடுகிறது

உன்னுடைய வார்த்தைகளும்

ஓராயிரம் அன்பு சக்தியை தாங்கி வரும்

மீண்டும் அந்த ஒலியை என் செவிகள்

கேட்டுமா அந்த சகோதரி இங்கு

வந்து பின்னூட்டம் இடுமா?

காத்திருப்பது நான் மட்டும் அல்ல

எனது கைபேசியும் தான்

கலங்க விடாமல் மீண்டும்

கதைப்பாயா என்னை ஈன்றவளே...

வேண்டும்

சீராட்டி தலைவாரி பள்ளி அனுப்பும் -
அம்மா வேண்டும்
சிற்றுண்டி வாங்கி உண்ண பணம் தரும் -
அப்பா வேண்டும்
மகிழ்ச்சியான வாழ்வு வாழ -
வீடு - உறவுகள் வேண்டும்
நண்பரோடு ஓடி விளையாட -
பள்ளிப் பருவம் வேண்டும்
பட்டம் வரை கல்வி பயில -
பண வசதிகள் வேண்டும்
ஏழை சிறார் நிலை ஒழிக்க -
கலெக்டர் / பிரதமர் ஆக வேண்டும்
அடுக்குகிறேன் கனவுகளை
சாலையோர நாயகனாக!
__________________

தனிமை


அரவணைக்கும் அன்னை இழந்து
வழிகாட்டும் தந்தை இழந்து
வாழ்வைப் பகிரும் சகோதரர் இழந்து
தோள்கொடுக்கும் நண்பர் இழந்து
ஓடி விளையாடிப் பள்ளி பயிலும் வயதினில்
என் முழு வாழ்விழந்து - சாலையோரத்தில் அனாதரவற்று

இறைவா
இழப்புகள் அனைத்தும் இத்துடன் இழக்கட்டும்
இழப்பற்ற சமுதாயம் நன்றே மலரட்டும்
இன்பகர வாழ்வு எல்லோர்க்கும் உதிக்கட்டும்
யுத்தமெனும் வார்த்தை அகராதி இழக்கட்டும்
__________________

அன்னை


மனதிலே குழப்பங்கள்
மாறிடுமா வாழ்க்கை
மனதில் உள்ள ரணங்கள்
மாற்றிட அன்னை இல்லை
மனதின் குமுறல்கள்
மாற்றிட நினைக்கிறேன் முடியவில்லை
மகிழ்ச்சி தொடுகிறேன் கிடைக்கவில்லை
மனதின் கசப்புகள் கசிகிறது கண்ணீர்
கண்ணீருக்கு பதில் அன்பு
அந்த அன்பு எப்போது எனக்கு இங்கு

பிரசவம்

உயிரை கொடுத்து
உயிரை உலகதிற்க்கு
அறிமுகம்படுத்தும்பொழுது
அவளது வலிகளுக்காக
அழுகையுடன் பிறந்து குழந்தை...

யாரறிவு ஆறறிவு????

பழுத்துவிழும் இலைகளை
எருவாக்கி விருட்சமா(க்கு)வது
ஓரறிவு ஜீவன்களாம்..!

சருகாக உருவகிப்பது
ஆறறிவு ஜீவன்களாம்.

யாரறிவு ஆறறிவு????

கல் நெஞ்சம்

உன் உதடுகள்
மலடுகளா-காதலை
பிரவேசிக்க
மறுக்கிறது

உடன்படிக்கை


நண்பன்


நட்பு

போட்டி வேண்டாம்

ரோஜா : ஓ....மல்லியக்கா

மல்லி : ஏண்டி, ரோஜா அக்கா

ரோஜா : மல்லியக்கா மல்லியக்கா எங்கடி போறே?
கொஞ்சம் சொல்லடியக்கா
எதுக்கு இப்படி குலுக்கி நடக்கிறே?

மல்லி : நான்-மணவறையைச் சிங்காரிச்சு
வாசனையை அள்ளித் தௌிச்சு
வாரவங்க எல்லோரையும்
மயக்கப் போறேன்
மணப்பொண்ணு கூந்தலிலே
மணக்கப் போறேன்

ரோஜா : நீ-மணப்பொண்ணு தலையில் மட்டும்
மணக்கப்போறே,
நான்-மாப்பிள்ளை கழுத்தச்சுத்தி
தொங்கப் போறேன்
நீ-வாசனையைக் கொடுத்துப்பிட்டு
வதங்கப் போறே,
நான் வாரவங்க கையில் எல்லாம்
குலுங்கப் போறேன்-அடி
தந்தனத்தான தந்தனத்தான
சரக்கிது தானா? - உன்
தரத்துக்கும் உடல் நெறத்துக்கும் நான்
கொறஞ்சு போனேனா?

மல்லி : கள்ளமில்லா மனசுக் கென்னை உவமை
சொல்வாங்க - பெரும்
கவிஞரெல்லாம் காவியத்தில் இடம்
கொடுப்பாங்க,
காத்தடிச்சா போதும் என்னைக்
காணத்துடிப்பாங்க - ஓன்னை
கண்டாக்கூட முள்ளெ நெனச்சு
முகஞ்சுளிப்பாங்க - அடி
தந்தனத்தான தந்தனத்தான
சரக்கிது தானா? - உன்
தரத்துக்கும் உள்ளகுணத்துக்கும் நான்
கொறஞ்சு போனேனா?

ரோஜா : நீ - மலருமுன்னே வந்து கடைக்கு
மலிஞ்சு போறவ!

மல்லி : நீ - உலருமுன்னே தொட்டாக்கூட
உதிர்ந்து போறவ!

ரோஜா : நீ - வளரும் போதே கொம்பைத்
தேடிப்புடிச்சவ!

மல்லி : அதுக்கு வகையில்லாமெ
தனிச்சு நின்னு!-அடி
தந்தனத்தான தந்தனத்தான
சரக்கிது தானா? - உன்
தரத்துக்கும் உள்ளகுணத்துக்கும் நான்
கொறஞ்சு போனேனா?

(தாமரை வருதல்)

தங்கச்சி தங்கச்சி
தாமரைத் தங்கச்சி
எங்களுக்குள்ளே எவதான் சிறந்தவ
எடுத்துச் சொல்லு தங்கச்சி?

தாமரை : மலருவதெல்லாம் உலருவதுண்டு
மறந்துட வேணாம் அக்கச்சி! அக்கச்சி! - சில
மனிதரைப் போல வம்புகள் பேசி
பிரிந்திட வேணாம் அக்கச்சி! அக்கச்சி!

தாமரை : உலகில் சிறந்தது என்ன?

மல்லி : அன்பு உள்ளவர் செய்திடும் தானம்

தாமரை : அந்த தானத்தில் சிறந்தது என்ன?

ரோஜா : நல்ல தன்மை வளர்க்கும் நிதானம்

தாமரை : அதிலும் சிறந்தது என்ன?

மல்லி : பல அஹிம்சா மூர்த்திகள்
ஆராய்ந்து சொன்ன உலக சமாதானம்!

தாமரை : அதை நாம் உணர்ந்து
நடக்க வேணும் எல்லோரும்-ஒன்றாய்
இருக்கவேணும்!-அப்போதுதான்
உலவும் சமாதானம்-எங்கும்
நிலவும் சமாதானம்!

மூவரும் : அதை நாம் உணர்ந்து
நடந்திடுவோம்
எல்லோரும் ஒன்றாய்
இருந்திடுவோம்!

சூதாட்டம்

சூதாடி மாந்தர்களின்
சுகவாழ்வும் ஒருநாளில்
பாதாளம் போகுமெனல்
பாரறிந்த உண்மையன்றோ?

சொல்ல முடியாத துன்பக் கதை
சூதாடி மனிதரின் சோகக் கதை
நல்ல மனிதரும் வஞ்சகராகி
கள்ள வேலைகள் செய்த கதை-சிலர்
கொள்ளை லாபத்தில் கொண்ட மோகத்தால்
உள்ளதும் இழந்து உருக்குலைந்த கதை ( சொல்ல )

அந்த நாளிலே பஞ்ச பாண்டவர்
அரசு உரிமையை இழந்ததும்
அழகு பாஞ்சாலி அம்மையாருடன்
அனைவரும் காட்டில் அலைந்ததும்
அன்பு மேலிடும் நளன் தமயந்தி
அல்லல் சுமந்து வருந்தியதும்
அரிய காதலைப் பிரிய நேர்ந்ததும்
ஆதாரம் இழந்ததும் சூதாட்டத்தாலே ( சொல்ல )

பாரதிக்கு நிகர் பாரதியே

நாடாரை நாடென்றார்

To enhance the vannam, Kanna Dhasan used the same word repeatedly in each line. The poem was sung in praise of Kamaraja nadar (காமராஜ நாடார்) and the word (நாடார்).

சொத்து சுகம் நாடார்,
சொந்தந்தனை
நாடார்பொன்னென்றும் நாடார்,
பொருள் நாடார்,
தான்பிறந்தஅன்னையையும் நாடார்,
ஆசைதனை நாடார் ,
நாடொன்றே நாடித்தன்
நலமொன்றும்
நாடாதநாடாரை நாடென்றார்.
எழுதியவர் : கவிஞர் கண்ணதாசன்

பாரதி


கவிதை எழுதுபவன் கவியன்று.
கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன்,
அவனே கவி" - பாரதி

பாரதியின் கனவு

பாரத தேச மென்று பெயர்சொல்லுவார் - மிடிப்
பயங் கொல்லுவார் துயர்ப்பகை வெல்லுவார்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்
சிங்க மராட்டியர் தங் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்.

சாதி இரண்டொழிய வேறிலை யென்றே
தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்த மென்போம்
நீதி நெறியினின்று பிறர்க் குதவும்
நேர்மையர் மேலவர் கீழவர் மற்றோர்

மரணத்தோடு

நினைவெல்லாம்
நீநித்திரையில்லாமல்
நான்கனவெல்லாம்
நீகாலமெல்லாம்
கண்களை மூடியபடி
நான்உணவெல்லாம்
நீஉண்ண முடியாமல்
நான்மனதெல்லாம்
நீமகிழ்ச்சியோடு
நான்பிரிவெல்லாம்
நீமரணத்தோடு நான்

ஜோ‌யி‌ல் எ‌ன்பவ‌ர் எழு‌திய க‌‌விதைக‌ளி‌ல் ‌சில