பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. பரிபாடல்-திரட்டு 8:7-12
பூவினுள் பிறந்தோன்-
பிரம்மாநான்மறைக் கேள்வி
நவில் குரல் எடுப்ப- ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் முழக்கம்
அந்தணர் ஓதவஞ்சியும் -சேர தலைநகர்
- வஞ்சிகோழியும்- உரையூர்- சோழ தலைநகர்கோழியின் எழாது- சேவல் கூவலில் எழ
பாண்டி நாட்டு தலைநகர் மதுரைவாசி சொல்கிறார்: சேர தலைநகர்- வஞ்சிவாழ் மக்களும், உரையூர் சோழ தலைநகர்வாழ் மக்களும் தினமும் அதிகாலை சேவல் கூவலில் எழுகின்றனர். நாங்கள் அதிகாலையில் அந்தணர் ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் ஓதும் முழக்கம் கேட்டு எழுகிறோம் என பெருமை கொள்கின்றார்.
பின்குறிப்பு: பாவணர் வழியோர்படி சங்கம்,
சமுதாயம் இரண்டும் சமஸ்க்ருத சொற்கள்,
அவற்றின் தமிழ் கழகம், குமுகாயம்.
No comments:
Post a Comment