சிலம்பிலே திருமணக்காட்சி
தமிழர் திருமண முறை பற்றி அறிந்துகொள்ள சங்க இலக்கியங்களில் ஒன்றும்கைகொடுக்கவில்லை. அவற்றில் ஒன்றிரண்டிலே உவமைப் பொருளாகத் திருமணம் பற்றிச்சொல்லப்படுகிறது. திருமணத்தை முழுமையாகக் காட்சிப்படுத்தும் செய்யுள் ஒன்றுகூடஇல்லை. தொல்காப்பியத்திலே திருமணம் பற்றிச் சொல்லப்படுகிறது என்றாலும் அதிலும்மேலெழுந்தவாரியாகச் சுட்டிச் சொல்லப்படுவதன்றி விரிவாகக் கூறப்படவில்லை. திருமணக்காட்சியை முழுமையாகக் காட்டும் முதல் இலக்கியம் சிலப்பதிகாரம்தான். அதிலே காப்பியநாயகி, நாயகனான கண்ணகி - கோவலன் திருமணம் பற்றிக் கூறப்படுகிறது. அதுவருமாறு:"யானை யெருத்தத்து அணியிழையார் மேலிரீஇமாநகர்க் கீந்தார் மணம்அவ்வழிமுரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம்வெண்குடைஅரசெழுந்ததோர் படியெழுந்தன அகலுள்மங்கல அணியெழுந்ததுமாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்துநீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்வானூர் மதியஞ் சகடணைய வானத்துச்சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்தீவலஞ் செய்வது காண்பார்கண் நோன்பென்னைவிரையினர் மலரினர் விளங்கு மேனியர்உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர்விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகைமுனைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்போதொடு விரிகூந்தற் பொலனறுங் கொடியன்னார்காதலாற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்தீதறு கெனவேத்எதிச் சின்மலர் கொடுதூவிஅங்கண் உலகின் அருந்ததி அன்னாளைமங்கல நல்லமளி ஏற்றினார் தங்கியஇப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கைஉப்பாலைப் பொற்கோட்டுஉழையதா வெப்பாலும்செருமிகு சினவேற் செம்பியன்ஒருதனி ழி உருட்டுவோ னெனவே(மங்கல வாழ்த்துப் பாடல்)மங்கல வாழ்த்துப் பாடலுள் வரும் "வானூர் மதியஞ் சகடு அணைந்த நன்னாள்"என்பதற்கு "வானத்திலுள்ள ரோகிணி என்னும் நட்சத்திரத்தை சந்திரன் கூடிய நன்னாள்"என்றுதான் பொருள் சொல்லப்படுகிறது. இதிலே புலவருலகில் கருத்துவேறுபாடிருக்கவில்லை.மணணுலக அருந்ததிரோகிணிக்கும் சந்திரனுக்குமுள்ள உறவு மனைவிக்கும் கணவனுக்குமுள்ளது போன்றதுஎன்று கதை கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ரோகிணியைச் சந்திரன் கூடிய நாளேதிருமணத்திற்கான நன்னாள் என்று கருதி அந்நாளிலே கண்ணகி-கோவலனுக்குத்திருமணம் செய்தனர் அவர்களின் பெற்றோர்- என்கிறார் இளங்கோவடிகள்.இன்னும் "சாலியொரு மீன் தகையாள்" என்கிறார் கண்ணகியை. கற்புக்குக் கடவுளாகஅருந்ததி என்னும் நட்சத்திரத்தைக் குறிப்பிடுன்றன இந்து சமய காப்பியங்கள்.அதையொட்டியே கண்ணகி அருந்ததியோடு ஒப்பிடப்படுகிறாள். விண்ணுலகில் கற்புக்குக்கடவுள் அருந்ததி என்றால் மண்ணுலக மாதர்க்குக் கற்புக்கொரு கடவுளாவாள்கண்ணகியென்பது சிலம்பு தந்த சேர முனிவரின் பிரகடனம். இது பாரதப் பெருநாடெங்கும்பரவியுள்ள இந்துக்களின் நம்பிக்கையாகும். கவே இதுவும் தமிழருக்கேவுரிய திருமணச்சடங்கல்ல.இன்னும், "மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட", கண்ணகியைக் கைப்பிடித்துக்கோவலன் புரோகிதன் வளர்த்த தீயை வலம் வருகிறான் என்பதும் இளங்கோ தரும்திருமணச் செய்தி. "மாமுது பார்ப்பான்" என்பதற்கு, பிதாமகன் (பிரம்மதேவன்) என்றும்"புரோகிதனுமாம்" என்னும் பொருள் கூறுகின்றார் அடியார்க்கு நல்லார். பிரம்மா நால்வேதங்களைத் தந்தவன் என்பது பரத கண்டமெங்குமுள்ள இந்துக்களின் பொதுநம்பிக்கை. அதனால் இந்துக்களாகவுள்ள தமிழர்களும் இதை நம்புகின்றனர்."மாமுது பார்ப்பான்" என்பது புரோகிதனை மட்டும் குறிப்பதாகக் கொண்டு, அவன் வேதவழிப்படி திருமணத்தை நடத்தி வைத்தான் என்று பொருள் கொள்ளத் தூண்டும் வகையிலே"புரோகிதனுமாம்" என்கிறார் அடியார்க்கு நல்லார். இது ராயச்சிக்குரியது."மாமுது பார்ப்பான்" என்பதற்குப் பிரம்ம தேவன் என்று மட்டுமே பொருள் கொண்டால்இடர்ப்பாடெதுவுமில்லை. மாறாக, "புரோகிதன்" என்பது மட்டுமே கொண்டால், அவன்வயதால் முதியவன் என்று நம்பியாக வேண்டும்.பொக்கை வாய்ப் புரோகிதர்பற்களை இழந்த பொக்கை வாய்ப் பார்ப்பானை புரோகிதத்திற்கு அழைக்கக்கூடாது என்பதுஇந்துக்களாகவுள்ள தமிழரின் நம்பிக்கை. "பல்லு போனால் சொல்லும் போம்" என்பதும்பழமொழி. வடமொழி மந்திரம் உந்தியிலிருந்து எழுந்து வாய் வழி ஒலிப்பதாகும்.அதனால்தான் அது மந்திர மொழி எனப்படுகிறது. அதிலேதான் புரோகிதம்நடத்தப்படவேண்டும் என்ற நம்பிக்கையும் பிறந்தது. பல்லில்லாதவன் மந்திரஞ் சொன்னால்சொற்களின் வலிமை போய்விடுமாம்! பொய்ப்பல் கட்டிக்கொள்ள வசதியில்லாத காலத்தில்பிறந்த சிலப்பதிகாரம் தலால், "மாமுது பார்ப்பான் மறைவழி" என்பதற்கு பிரம்மதேவன்தந்த வேதங்களில் சொல்லியுள்ள மந்திரங்களை யோதி புரோதிகன் திருமணத்தைநடத்தினார் என்று சொல்வதுதான் முறையாகும்.கண்ணகி கோவலன் திருமணம் தமிழர் இன வழி அல்லாமல் நால்வருணப்பாகுபாட்டின்படி வணிகருக்குரிய முறையில் நடந்ததாகவும் அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.ளவானூர் மதியம்" என்பதிலிருந்து "காண்பார்கண் நோன் பென்னை" என்பதுவரையுள்ள வரிகளுக்கு," மதியம் சகடணைந்த நான்னாளிலே பார்ப்பான் மறையிற் சோதிடாங்கத்துள்வணிகர்களுக்குக் கூறிய நெறியிலே சடங்கு காட்ட இவர் இங்ஙனம் தீவலஞ் செய்கின்றஇதனைக் காண்கின்றவர் கண்கள் முற்பவத்திற் செய்த தவம் யாதுகாண் என்பாராய்."என்பது அடியார்க்கு நல்லார் தரும் விளக்கம்.சிலம்பில் படும் புரோகிதர்இதுவரை கூறியவற்றால்-குறிப்பாக , சிலம்பு தந்த அடிகளாரும், அதற்கு விளக்கம் தந்தஅடியார்க்கு நல்லாரும் காட்சிப்படுத்தும் கண்ணகி-கோவலன் திருமணமானது வேத(இந்து) மதத்தவருக்கு, அவர்களிலேயும் நால்வருணங்களிலே மூன்றாவது வருணத்தவரானவணிகருக்குரிய நெறிப்படி நடந்ததென்பது உறுதிப்படுகிறது. இதிலே அந்நாளிலும்இந்நாளிலும் தமிழ் இனத்தவருக்கே உரிய திருமணக்காட்சியில் சடங்காகிவிட்ட தாலிஅணிவிப்பது குறிப்பிடப்படாததால், சிலப்பதிகாரக் காலத்தில் அவ்வழக்கம் இல்லையென்றுகிவிடாது.கண்ணகி-கோவலன் திருமணத்தில் வேத வழியிலிருந்து வேறுபட்ட -விரோதப்பட்ட அல்ல- இனவழிப்பட்ட மணமகள் கழுத்தில் மணமகன் தாலியணிவிக்கும் சடங்கும் நடந்திருக்கும்என்பதற்கு சிலப்பதிகாரத்திலுள்ள வேறு காதைகளிலிருந்து செய்தி கிடைக்கிறது.சங்க இலக்கியமான புறநானூற்றுப் பாடல் 127-ல் "ஈகையரிய இழையணி மகளிர்" எனவரும் சொற்றொடருக்கு,"மகளிர்க்கு மங்கல அணி ஒழியப் பிறவெல்லாம் நீக்குதற்கு உரியவாதலின் ஈகையறியஇழைபெற்றார்" என்கிறார் பழைய உரைகாரர்.சங்க இலக்கியமான நெடுதல் வாடையிலும், "ரந்தாங்கிய அவர் முலையகத்துப் பின்னமைநெடுவீழ தாழத் துணைதுறந்து" என்று வருகிறது. இதற்கு" முன் முத்தால் செய்த கச்சுச்சுமந்த பருத்த முலையினையுடைய மார்பிடத்தே இப்பொழுதுகுத்தலபுல் அமைந்த நெடிய தாலி நாண் ஒன்று மட்டுமே தூங்க"என்று உரையெழுதியுள்ளார். புலவர்கெளல்லாம் உச்சி மேற்கொண்டு போற்றும்நச்சினாக்கினியர்.சிலம்பில், "அகலுள் மங்கல அணியெழுந்தது" என்னும் வரிக்கு, "ஊரிலே மாங்கல்யசூத்திரம் வலஞ்செய்தது" என்கிறார் அருபத உரைகாரர். மற்றும் கணவன் கோவலன்பிரிந்த வருந்தத்தால் அணிகல்னகளையும் அலங்காரத்தையும் துறந்து வாழும் கண்ணகியைபாதாதி கேசமாக வருணிக்குமிடத்து, கழுத்தண்டை வரும்போது "மஙகல அணியிற்பிறிதணிமகிழாள்" என்கிறார் இளங்கோவடிகள்.பிற அணிகளை அகற்றிவிடட்ட கண்ணகி, கணவன் இன்னும் உயிர்வாழ்கிறான்என்பதற்கு அடையாளமாகவுள்ள மங்கல அணியான மாங்கல்யம் ஒன்றை மட்டும்அணிந்திருந்தாளாம். அது ஒன்றுமட்டுமே அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்ததாம்.வஞ்சிக் காண்டத்துக் காட்சிக் காதையில் சேரன் செங்குட்டுவனுக்கு நல்லணிகளோடுகண்ணகி காட்சியளித்ததைக் கூறுமிடத்தும், " நாவலம் பொன் இழை" கழுத்தில்இருந்ததாக இளங்கோ அடிகள் கூறுகிறார்.திரும்பவும் கூறுகிறேன். சிலம்பில் திருமணத்தைக் காட்சிப் படுத்துமிடத்து கண்ணகிகழுத்தில் கோவலன் தாலியணிவித்ததைக் கூறாமல் விட்டது, அது வேத வழிப் பட்டதாகஅல்லாமல் தமிழர் இனவழிப்படடதாக இளங்கோ கருதியதால்தான்.நன்றிமபொ சிவஞானம்தமிழர் திருமணம்பூங்கொடி பதிப்பகம்__________________
No comments:
Post a Comment