தேவையான பொருட்கள்:
ரசப் பொடி - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
துவரம் பருப்பு - 100 கிராம்
எலுமிச்சம்பழம் - 2
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தாளிப்பதற்கு
கறிவேப்பிலை - 1 தழை
கடுகு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* 1 டீஸ்பூன் உப்பு, 1 சிட்டிகை பெருங்காயம் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் (நீள்வாக்கில் நறுக்கவும்) இரண்டு கப் தண்ர் சேர்த்து, கொதிக்க விடவும்.
* 1 கப் வேகவைத்த துவரம் பருப்பை போட்டு பொருட்கள் முழுவதும் பச்சை வாடை போகும் வரை வேக வைக்கவும்.
* ரசப்பொடியை சேர்த்து இரண்டு நிமிடத்திற்கு சூடு செய்யவும்.
* கடுகு மற்றும் கறிவேப்பிலையை தாளித்து அதில் சேர்க்கவும்.
* அதனை இறக்கி, 2 எலுமிச்சம் பழத்தைப் பிழித்து நன்றாகக் கலக்கவும். பருப்பு வேகவைத்த நீரையும் சேர்க்கவும்.
குறிப்பு: சமைத்து முடிக்கும் வரை ரசத்தை கலக்கக் கூடாது.
அறம்
அம்மா தாயே!
குரல் கொடுத்த
பிச்சைக்காரனை
விரட்டி விட்டு
பிள்ளைக்கு பாடம்
சொல்லித்தந்தாள்
அன்னை!
அறம் செய விரும்பு!
குரல் கொடுத்த
பிச்சைக்காரனை
விரட்டி விட்டு
பிள்ளைக்கு பாடம்
சொல்லித்தந்தாள்
அன்னை!
அறம் செய விரும்பு!
வேலை
உறவுகள் தொலைத்து
கனவுகள் சுமந்து
காற்றினில் கலந்து
எல்லைகள் கடந்து
வந்தேன் இங்கு...
கிடைத்தது என்னவோ
இலவச காற்று மட்டும்தான்
கனவுகள் சுமந்து
காற்றினில் கலந்து
எல்லைகள் கடந்து
வந்தேன் இங்கு...
கிடைத்தது என்னவோ
இலவச காற்று மட்டும்தான்
பறவையின் ஒலி
வீட்டுக் கதவு
திறந்து மூடும்போது
தவறாமல் ஒலிக்கிறது
அந்த மரத்தில்
எப்போதோ வாழ்ந்த
பறவையின்
'கி(ரீ)ச்.... கி(ரீ)ச்' சத்தம்!
திறந்து மூடும்போது
தவறாமல் ஒலிக்கிறது
அந்த மரத்தில்
எப்போதோ வாழ்ந்த
பறவையின்
'கி(ரீ)ச்.... கி(ரீ)ச்' சத்தம்!
Subscribe to:
Posts (Atom)