Showing posts with label வரலாற்றுச் சுவடுகள். Show all posts
Showing posts with label வரலாற்றுச் சுவடுகள். Show all posts

கோரல் டிரா - வரலாறு 1



வணக்கம் நண்பர்களே !

உங்களை இந்த கட்டுரையின் மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...

அதற்கு மிக முக்கியமாக அனு அவர்களுக்கு மிக்க நன்றி. கணிணியில் வரையலாம் வாங்க!!! திரியில் #47 பின்னூட்டத்தில் அவர் கேட்டகேள்விக்கு ஆஹா நாமும் கிட்டதட்ட 12 வருடங்களாக கோரல்டிரா 4 இல் இருந்து உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதன் பூர்வீகத்தை நாம் சரியாக தெரிந்து கொள்ளவில்லையே என்று நினைத்து அதற்கான தேடலை தொடங்கிய போது எனக்கே தெரியாத பல சுவாரசியமான செய்திகள் கிடைத்தன. அதை உங்களிடத்தில் கொண்டு வந்து சேர்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த தொடரை எழுத தூண்டிய அனு அவர்களுக்கும் அந்த திரி தொடங்கி அந்த கேள்வியை கேட்க தூண்டிய ஆதவா அவர்களுக்கும் நன்றி தெரிவித்து இதோ ஆரம்பிக்கிறேன்.

முன்னுரை

கோரல் டிரா இந்த பெயர் உலகம் முழுவதும் உள்ள அனைத்து பத்திரிக்கை, அச்சகத்துறை, விளம்பரத்துறை, வடிவமைப்பத்துறை இன்னும் பல துறைகளில் அடிக்கடி ஒலிக்கும் பெயர். உலகத்தில் உள்ள அனைத்து கணனியிலும் கிட்டதட்ட 80% இந்த கோரல்டிரா நிறுவப்பட்டிருக்கிறது என்பது உண்மை. இன்றைய தேதியில் கோரல் டிரா இல்லாத கணனியை நினைக்க முடியாது அப்படி கலந்து விட்ட மாபெறும் மென்பொருளின் வெற்றிக் கதை...

1. கோரல் நிறுவனத்தின் தொடக்கம்...


கோரல் (Corel) என்னும் நிறுவனத்தை தொடங்கிய Michael Cowpland 23 ஏப்ரல் 1943ல் இங்கிலாந்தில் பிறந்தார். லண்டன் இம்பீரியல் கல்லூரியில் Bsc பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் அவர்கள் குடும்பத்துடன் கனடாவிற்கு இடம் பெயர்ந்தார்கள். Michael Cowpland தனது மேற்படிப்பையும் (1968) Ph.D.யும் (1973) ஒட்டவாவில் உள்ள கேரலிடன் பல்கலைகழகத்தில் முடித்தார். பின்னர் Bell Northern Research ல் வேலை செய்தார். 1973ல் MicroSystems International என்ற பெயர் மாறியது. அந்த நிறுவனத்தில் உடன் பணியாற்றியவர் Terry Matthews. பின்னர் Michael Cowpland, Terry Matthews இருவரும் இணைந்து Mitel Networks என்ற நிறுவனத்தை நிறுவினார்கள். அந்த நிறுவனம் தனியார் கிளை தொலைபேசி இணைப்பக மின்னனு இயந்திரத்தை உருவாக்கி விற்பனை செய்தார்கள். தொடக்கத்தில் நல்ல வெற்றிகரமாக இயங்கி அந்த நிறுவனம் இந்த இருவரையும் மில்லினர்களாக்கியது. மிக அதிகமாக 250மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை நடந்தது(தற்போது நம்ம ஊர் மதிப்புக்கு 4 கோடி). ஆனாலும் அதிக விரிவுபடுத்துதாலும் மேம்படுத்து பிரச்சனைகளாலும் British Telecom என்ற நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்கள். 1984ல் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களிடம் உள்ள வேற்றுமையால் Michael Cowpland, Terry Matthews இருவரும் அதில் இருந்து வெளியேறினார்கள். Terry Matthews தான் தனியாக Newbridge Networks என்னும் நிறுவனத்தை கொடங்கினார்.

1985 வருடம் Michael Cowpland தனியாக ஒரு ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கினார். "Cowpland Research Laboratory" என்ற பெயரில் தொடங்கப்பட்டு பின்னர் Corel என்று எல்லாராலும் அறியப்பட்டது(Corel என்பதன் விரிவாக்கம் "Cowpland Research Laboratory"). இன்டெல் அடிப்படையான மென்பொருளை உருவாக்க ஆரம்பித்தது. DTP என்னும் தொழில் நுட்பத்தில் மென் பொருள் உருவாக்கும் முதல் தனியான நிறுவனம் என்பது இதுதான்.

(DTP - Desktop publishing என்பது வடிவமைப்பு, புத்தகத்திற்கு தட்டச்சு செய்தல், பக்க வடிவமைத்தல், Image என்றும் போட்டோவை தொகுத்தல்(Editing), அட்டைப் பெட்டி (Package) வடிவமைப்பு, வெளிப்புற விளம்பர வடிவமைப்பு என்ற பல வகையான வடிமைப்புக்கு ஒட்டு மொத்தமாக DTP - Desktop publishing என்று பெயர்)


Michael Cowpland .......................... ஒட்டவாவில் உள்ள அவரது இல்லம் ...................................... கோரல் டிரா தொகுப்பு 1
நிறுவனர்,
கோரல் கார்பொரேசன்.

1. கோரல்டிராவின் முதல் தொகுப்பு வெளியீடு...

பலவடிவங்களுக்கு பின் உருவானதுதான் கோரல்டிரா. கோரல் நிறுவனத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட Michel Bouillon மற்றும் Pat Beirne ஆகியோரால் பல மென்பொருட்கள் உருவாக்கப்பட்டது. அதில் மிகவும் வெற்றிகரமானது என்று நினைக்கப்பட்ட CorelDRAWவும் அந்த காலகட்டத்தில்தான் உருவானது. 1989ல் முதன்முதலாக CorelDRAWவின் 1வது தொகுப்பு வெளிவந்தது. மிக அற்புதமான வரவேற்பை பெற்றது முதல் தொகுப்பு. அடுத்தாக அதன் உழைப்பு மிகவும் அற்புதமானது.

(தொடரும்)

வீரபாண்டிய கட்டபொம்மன்


" ....தாய்ப்புலி தான் ஈன்ற குட்டிகளை தன்னுயிர் போனாலும் கவர்ந்து செல்ல யாருக்கும் அனுமதியளிக்காது. ... இதற்கு உதாரணமாகத்திகழந்தவர் கட்டபொம்மன். தம் எதிர்கால மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென்பதற்காக கொண்டகொள்கைகளை கடைசிவரை காப்பாற்றி தமிழகத்தின் வரலாற்றில் ஆழமாக பதியப்பட்டு நிற்கின்றார்..."
----------------------------------------------------------------------------


உலகின் உயிரின பரிணாம வளர்ச்சியில் மனிதன் என்ற படைப்பு மிக உன்னதமாகக்கருதப்படுகின்றது. உலகம் தோன்றியது முதல் இன்றைய காலகட்டம் வரை பிறந்து மறைந்தவர்கள் எல்லோரும் நம் நினைவில் நிற்கமுடியாத நிலை. ஆனால் காலத்தால் மறைக்க முடியாத மனிதர்கள் இன்றும் நினைவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அத்தகைய சிறப்பை அவர்கள் பெற்றதற்கு காரணம் அவர்களின் தனித்தன்மை வாய்ந்த அவர்களின் குணாதியங்கள்கள்தான். அப்படி வாழ்ந்து மறைந்த மாவீரனாக நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.
03-01-1760 ல் அழகிய வீரபாண்டியபுரத்தில் (இன்றைய ஒட்டப்பிடாரம்)பிறந்தார். இவருடைய தந்தை ஜெகவீரபாண்டியன். தாய் ஆறுமுகத்தம்மாள். கட்டபொம்மனின் முன்னோர்கள் தெலுங்கு தேசத்தை சேர்ந்தவர்கள. விஜயநகர பேரரசினரால் புலம் பெயர்ந்தவர்கள் எனக்கருதபபடுகின்றது. .இவர்களின் மூனறு புதல்வர்கள்தான் கருத்தையா என்ற வீரபாண்டிய கட்டபொம்மன், தளவாய் குமாரசாமி என்ற துரைசிங்கம் மற்றும் செவத்தையா என்ற ஊமைத்துரை.
இவர்களின் முன்னோர்கள் தெலுங்கு நாட்டின் பிரசித்திபெற்றவர்கள். கெட்டி பொம்முலு என வீரத்துக்கு அடையாளமாக சொல்லப்படும் சாஸ்த்தா அய்யணசாமி என்ற தெய்வத்தின் பெயரால் அழைக்கப்பெற்றவர்கள். அந்த வீரத்துக் காவல் தெய்வமாகக்கருதப்பட்டதனால் என்னவோ பிழைக்க வந்த வெள்ளையர்களுக்கு கட்டபொம்மன் ஒரு சிம்மசொப்பனமாகத்திகழ்ந்தார்.
சங்க காலத்தமிழ் காப்பியங்களில் வீரத்தமிழ்மன்னர்கள் தம் நாட்டு மக்களின் துயர் தீர்க்க தன்னுயிரையும் தர இசைந்தார்கள். தாய்ப்புலி தான் ஈன்ற குட்டிகளை தன்னுயிர் போனாலும் கவர்ந்து செல்ல யாருக்கும் அனுமதியளிக்காது. அவ்வாறே ஒரு மன்னன் தன் நாட்டு மக்களை காக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக அன்றைய தமிழ் மன்னர்கள் திகழ்ந்தார்கள் என புறநானூற்றுப்பக்கங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன. இதற்கு உதாரணமாகத்திகழந்தவர் கட்டபொம்மன். தம் எதிர்கால மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென்பதற்காக கொண்டகொள்கைகளை கடைசிவரை காப்பாற்றி தமிழகத்தின் வரலாற்றில் ஆழமாக பதியப்பட்டு நிற்கின்றார்.
பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மனின் மூதாதையர்களில் ஒருவர் காலத்தில் நடந்ததாகக்கருதப்படும் கதைகளில் ஒன்று இன்றும் பேசப்படுகின்றது. ஒரு நாள் வேட்டையாடும் நேரத்தில், வேட்டை நாய்களினால் துரத்தப்பட்டு வந்த முயலொன்று குறிப்பிட்ட இடத்தில் வந்தவுடன் வேட்டை நாய்களை நோக்கி முயல் சீறிப்பாய்ந்ததாகவும் அதைக்கண்ணுற்ற அன்றைய கட்டபொம்மர் அதுவே தாம் கோட்டை கட்டுவதற்கு உகந்த இடம் எனத்தீiமானித்து அவ்விடத்திலேயே பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை நிறுவியதாகவும் கூறப்படுகின்றது.
கருத்தையா என்ற வீரபாண்டியன் 02.02.1790ல் கட்டபொம்மர்களின் வாரிசாக கருதப்பட்டு ஆட்சி அமைக்க அன்றைய மதுரைப்பாளையர்க்காரர்களால் அனுமதிக்கப்பட்டார். கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியின் மன்னனாகப் பொறுப்பேற்றார்.
1736 க்கு முன் ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள் மதுரை நாயக்கர் வம்ச அரசர்களால் பரிபாலனம் செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு சந்தாப் சாகேப் ஆர்கோட் என்பவரால் மதுரை அங்கு கடைசியாக ஆண்ட ராணியிடமிருந்து பறிக்கப்பட்டு நவாப் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. இக்காலகட்டத்தில் மக்களின் வரிப்பணம் பெருமளவில் சுரண்டப்பட்டதின் காரணமாகவும் மக்கள் மிக்க அதிருப்தி கொண்டிருந்தனர்.
அத்துடன் இஸ்லாமிய ஆட்சிமுறையை பெரும்பாலான பாளையக்காரர்கள் எதிர்க்கத்துணிந்தனர். இத்தகைய போக்குகள் இறுதியில் ஆர்க்காடு அரசினை வெள்ளையர்களிடம் நாட்டை அடகு வைக்கும் நிலைக்கு கொண்டு சென்றது. சரியான தருணம் பார்த்திருந்த ஆங்கிலேயர்கள் ஆர்க்காடு நவாப் அரசுக்கு கொடுத்துள்ள கடனுக்காக நவாப்பிடமிருந்து வரிவசுலிக்கும் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு மக்களிடமிருந்து தாறுமாறாக வரி என்ற பெயரில் கொள்ளையடிக்க ஆரம்பித்தார்கள்.
வரியை மக்களிடமிருந்து வாங்கிக்கொடுக்காத பாளையக்காரர்கள் கொடுமைக்காளானார்கள். இத்தகைய நிலை ஏறத்தாழ 40,50 ஆண்டுகள் நீடித்த நிலையில்தான் பாஞ்சாலஞ்குறிச்சியில் கட்டபொம்மன் ஆட்சிக்கு வந்தார். மக்களின் வரிப்பணம் பாலாக்கப்பட்டு நிர்வாகம் தறிகெட்டுக்கிடந்த ஒரு காலகட்டத்தில் மக்களை புரட்சியிலிருந்து ஒடுக்குவதற்கு ஆங்கிலேயர்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இத்தகைய போக்கு பிரச்சனைகளை மேலும் மோசமாக்குவதாக அமைந்தது.
இத்தகைய குழப்பமான நிலையில் ஆங்கிலேயர்கள் தங்களுக்கேயுரித்தான பிரித்தாழும் சதிவேலைகளை மேற்கொண்டு மக்களிடம் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தினார்கள்.
இக்காலகட்டத்தில் ஆஙகிலேயரின் ஒடுக்குமுறைக்கு சற்றும் சளைக்காமல் கட்டபொம்மன் அவர்களுக்கு வரி சேகரித்துக் கொடுப்பதை நிறுத்தினார். புல அச்சுறுத்தலுக்களுக்கும் பணியாமல் கட்டபொம்மன் தன் நிலையில் உறுதியாக இருந்தார். இதனால் கட்டபொம்மனை வஞ்சக வலைவிரித்து கவிழ்க்கத் தருணம் பார்த்திருந்தார்கள். கட்டபொம்மனின் மந்திரியாக செயல்பட்டு வந்தவர் தானாதிப்பிள்ளை அவர்கள்.
பிரதான தளபதியாக அமைந்தவர் சுந்தரலிங்கம் என்று அறியப்பட்டு பாஞ்சாலங்குறிச்சிக்காக தன் இன்னுயிரைத் தியாகமாக்கியவர். மதுரை பாளையக்காரர்களால் அணைவரிடமிருந்தும் கப்பம் பெற்றுக்கொண்ட ஆங்கிலேயர்களால் கட்டபொம்மனிடம் தங்கள் கொட்டம் பலிக்காமல் அவமானம் அடைந்தனர். அதனால் சமாதானம் பேசுவது என்ற போர்வையில் கட்டபொம்மனுக்கு தூது அனுப்பினார்கள்.
பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடம் இராமநாதபுரம் சேதுபதி ராஜா மாளிகை. பேச்சுவார்த்தைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர் ஜாக்ஸன் துரை. கட்டபொம்மன், தானாதிபிள்ளை மற்றும் தன் குழுவினருடன் இராமநாதபுரம் சென்றார். அங்கே நடந்த பேச்சுவார்தை தோல்வியாகி கைகலப்பில் முடிந்தது. ஆங்கிலேயரின் இந்த திட்டமிட்ட வஞ்சக வலையில் சிக்காமல் தன் வீரத்திறமையால் அங்கிருந்து தப்பினார். ஆனால் தானாதிப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கைக்காக ஜாக்ஸன் துரை பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி ஆலோகனையின்பேரில் திருநெல்வேலி கலெக்டர் கட்டபொம்மனுக்கு வரி கொடாமைக்கு காரணம் கேட்டு கடிதம் 16..03.1799ல் அனுப்பினார். இதற்கு கட்டபொம்மன் வரி செலுத்த வேண்டிய பணம், தானியங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டதாக பதில் அனுப்பினார்.
கட்டபொம்மனின் தலைவணங்காத்தன்மை வெள்ளையர்களை மேலும் கோபத்துக்குள்ளாக்கியது. கட்டபொம்மனை நாட்டின் பொது எதிரியாக்கி தீர்மானம் நிறைவேற்றினர். தங்கள் நயவஞ்சக திட்டத்துக்கு கட்டபொம்மனுக்கு எதிராக எட்டப்பனை தேர்ந்தெடுத்து கட்டபொம்மனின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆராய்ந்து சரியான தருணம் பார்த்து இராணுவத்தளபதி பாணர்மேன் தலைமையில் பாஞ்சாலம்குறிச்சி கோட்டையை தகர்க்கும் திட்டமத்தை உருவாக்கி,. கேர்னல் கொலினிஸ் தலைமையில் கோட்டையின் நாலாபக்கமும் தாக்குதல் நடத்தினார்கள்.
வெகு சுலபம் என எதிர்பார்த்த கொலின்ஸ் தாக்குதலை சமாளிக்கமுடியாமல் பின்வாங்கி மேலும் ஆயுதங்கள் தேவை என செய்தி அனுப்பினார். இதைப்பயன்படுத்தி கட்டபொம்மன் கோட்டையை விட்டு தப்பிச்சென்றார். பெருத்த ஏமாற்றத்துக்குள்ளான வெள்ளையர் கட்டபொம்மன் தலைக்கு விலை வைத்தார்கள். தானாதிப்பிள்ளை முதலிய 16 பேரை கைது செய்து அழைத்துச்சென்றார்கள். கைது செய்யப்பட்ட தானாதிபிள்ளையின் தலையை வெட்டி பொது மக்கள் பார்வைக்கென பொது இடத்தில் வைத்தார்கள்
கட்டபொம்மன் புதுக்கோட்டை ராஜாவிடம் தஞ்சம் புகுந்தார். ஆனால் வெள்ளையரின் வஞ்சனையின் காரணமாக கட்டபொம்மன் சரணடையவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
16.10.1799 ல் கைது செய்யப்பட்டு மூன்று வாரங்களுக்குப்பிறகு, இன்றைய தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு என்ற இடத்தில் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார். அவருடன் சேர்ந்து தங்கள் இன்னுயிரைத்தந்த வீர மறவர்கள் என்றென்றும் போற்றுதற்குறியவர்கள்.
கட்டபொம்மனின் வீழ்ச்சிக்கு காரணகர்த்தாவாக விளங்கிய எட்டப்பன், எட்டயபுர ராஜாவாக ஆக்கப்பட்டு அவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது. பாஞ்சாலஞ்குறிச்சி கோட்டை கொள்ளையடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் வீரபாண்டியகட்டபொம்மன் என்ற மாமனிதனின் பெயர் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. முப்பத்து ஒன்பது ஆண்டுகளே வாழ்ந்த அவரின் தியாகத்தை போற்றுவோமாக.
கட்டபொம்மனின் நினைவு என்றும் போற்றத்தக்க வகையில் கயத்தாற்றில் அவருடைய சிலையும், பாஞ்சாலஞ்குறிச்சியில் கோட்டையும் நிலைபெற்றுள்ளது.
விடுதலைக்கு விலையாக பாஞ்சாலஞ்குறிச்சி என்ற ஊரும் கோட்டையும் அன்று வெள்ளையர்களால் மண்மேடுகளாகப்பட்டது. இந்திய சரித்திரத்தில் ஜல்லியன் வாலாபாக் படுகொலை மிகப்பெரியதாக கருதப்படுகின்றது. அகைவிட பலமடங்கு பெரிய தியாகங்களை தமிழர்கள் இந்திய விடுதலைக்காக ஆற்றியுள்ளனர் என்பதற்கு பாஞ்சாலஞ்குறிச்சி ஒரு உதாரணமாகும்.

கொசோவோ : போராட்டமும் - விடுதலையும்


யூகோஸ்லாவியா கூட்டாட்சிக் குடியரசின் ஒரு அங்கமாக இருந்த கொசோவோவிற்கு யூகோஸ்லாவிய அதிபராக இருந்த டிட்டோ 1974 ஆம் ஆண்டு சுயாட்சி அளித்தார்.இன்றைய செர்பியாவின் வட பகுதியில் இருந்த வோஜ்வோடினாவிற்கும், தெற்கில் கொசோவோவிற்கும் மார்ஷல் டிட்டோ சுயாட்சியளித்து யூகோஸ்லாவியா கூட்டாட்சிக் குடியரசை வலிமைபடுத்தினார்.ஆனால் டிட்டோவின் மறைவிற்குப் பிறகு, அதிபராக வந்த சுலோபோடான் மிலாசவிச், தனது அரசியல் செல்வாக்கை நிலைபடுத்திக் கொள்ள செர்பிய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார். கொசோவோ அல்பானியர்களுக்கு எதிராக வெறுப்புணர்ச்சியைத் தூண்டி, செர்பிய தேசியவாதத்தை வளர்த்து தனது அரசியல் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள மிலாசவிச் மேற்கொண்ட நடவடிக்கைகளே கொசோவோ விடுதலை போராட்டத்திற்கு வித்திட்டது.1989 ஆம் ஆண்டில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்து கொசோவோவிற்கு அளிக்கப்பட்டிருந்த சுய ஆட்சி அதிகாரத்தை மிலாசவிச் ரத்து செய்தார். அதுமட்டுமின்றி, கொசோவோ அல்பானியர்களை, அரசுப் பணிகளில் இருந்தும், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அமைப்புக்களிலிருந்தும் அகற்றி இன ஒழித்தல் நடவடிக்கையை வெளிப்படையாக செயல்படுத்தினார்.
webdunia photo
FILEடாக்டர் இப்ராஹிம் ருகோவா என்பவரின் தலைமையில் செர்பிய ஒடுக்குமுறையை எதிர்த்த கொசோவோ அல்பானியர்கள், தங்கள் பகுதியில் ஒரு நிழல் அரசை நிறுவினர். வன்முறை தவிர்த்து அமைதி வழியில் போராட்டத்தை துவக்கிய அல்பானியர்கள் தங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டுமென கோரினர். ஆனால் அக்கோரிக்கையை மிலாசவிச் நிராகரித்தார்.செர்பிய ஒடுக்கலை எதிர்த்து 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் கடுமையாக ஒடுக்கப்பட்டதையடுத்து கொசோவோவிலிருந்து 2 லட்சம் அல்பானியர்கள் வெளியேறினர்.செர்பிய பெரும்பான்மை மேலாதிக்க அரசால் கடுமையான இன ஒடுக்கலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும், இப்ராஹிம் ருகோவா தலைமையிலான மக்கள் போராட்டம் அமைதி வழியிலேயே தங்கள் உரிமைகளை மீட்கப் போராடியது. இந்த நிலையில் 1991 ஆம் ஆண்டு மற்றொரு பிரகடனத்தின் முலம் கொசோவோவின் நாடாளுமன்றத்தை அதிபர் மிலாசவிச் நீக்கினார்.இதைக் கண்டு அயராத கொசோவோ மக்கள் தேர்தலை நடத்தி இப்ராஹிம் ருகோவாவை அதிபராக்கினர். 130 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்தையும் அமைத்தனர். இதனையடுத்து கொசோவோ அல்பானியர்களை கடுமையாக ஒடுக்கத் துவங்கினார் மிலாசவிச். அதுவரை அமைதி வழியில் போராடிய கொசோவோ மக்கள் ஆயுதமெடுத்தனர். கொசோவோ விடுதலை ராணுவம் அமைக்கப்பட்டது. அந்நிய நாட்டிற்குள் புகும் ஆக்கிரமிப்புப் படையைப் போல செர்பிய ராணுவமும், மற்ற ஆயுதப்படைகளும் கொசோவோவிற்குள் புகுந்து தாக்கின. பல்லாயிரக்கக்கான அல்பானியர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில்தான், 1998 ஆன் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி, ஐ.நா. பாதுகாப்பு பேரவை, அமைதியாகப் போராடிய கொசோவோ மக்கள் மீது மிக அதிகப்படியான அடக்குமுறையை செர்பிய காவல்துறை கட்டவிழ்த்து விட்டதென்று கூறி கண்டனம் செய்தது மட்டுமின்றி, யூகோஸ்லாவியாவிற்கு எதிராக ஆயுதத் தடையும் விதித்து தீர்மானம் (எண் 1169) நிறைவேற்றியது. கொசோவோ மக்கள் மீது செர்பியா கட்டவிழுத்துவிட்ட வன்முறை ஐ.நா.வின் 7 வது விதிமுறைகளின் படி, சர்வதேச அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியது என்றும் பாதுகாப்புப் பேரவை தனது தீர்மானத்தில் கூறியது.இதற்குப் பிறகும் அல்பானியர்களுக்கு எதிரான இன ஒடுக்கல் குறையவில்லை, மாறாக அதிகரித்தது. கொசோவோ மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றும் திட்டத்துடன் தனது இன ஒடுக்கலை தொடர்ந்தது யூகோஸ்லாவிய அரசு. செர்பியாவின் எல்லைப் பகுதிகளை ஒட்டியுள்ள அல்பானியர்களை வன்முறையை ஏவி விரட்டியடித்தது. சொந்த நாட்டு மக்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையால் 3 லட்சம் அல்பானியர்கள் மலைப்பகுதிகளுக்கும், காடுகளுக்கும் விரட்டப்பட்டனர்.இந்த நிலையில்தான் செர்பிய அரசின் ஒடுக்குமுறையில் இருந்து கொசோவோ மக்களைக் காக்க 1998 செப்டம்பரில் நேட்டோ படைகள் அந்நாட்டிற்குள் நுழைந்து செர்பிய படைகளை வெளியேற்றின.கொசோவோவில் அமைதி நிலைநாட்டப்பட்டது. 1999 ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் அதிகாரத்திற்குட்பட்ட இடைக்கால நிர்வாக அரசு ஏற்படுத்தப்பட்டது.
தன்னாட்சி உரிமை கோரி செர்பிய அரசுடன் கொசோவோ அரசியல் இயக்கங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத்தையடுத்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் நாட்டின் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி சுதந்திர பிரகடனம் செய்தது கொசோவோ.