சென்னை உருவான ஆண்டுகள்

Village          Year
Madraspatnam  1639
Narimedu (area to the west of Madraspatnam)      1645
Triplicane  1672
Tiruvottiyur  1708
Kottivakkam  1708
Nungambakkam  1708
Egmore  1720
Purasawalkam  1720
Tondiarpet  1720
Chintadripet  1735
Vepery  1742
Mylapore  1749
Chennapatnam  1801




























Chinese rocket launch marks giant leap towards space station

China launched its longest-ever space mission on Tuesday, marking another milestone on its path towards developing its own space station.

High quality global journalism requires investment. Please share this article with others using the link below, do not cut & paste the article. 

Shenzhou-X lifted off at 5.38pm from the space center near the northwestern town of Jiuquan with three astronauts on board. They will stay in space for 15 days, the China Manned Space Engineering Office said.


High quality global journalism requires investment. Please share this article with others using the 
Wu Peng, the programme’s spokeswoman, was quoted by state media as saying the mission marked the first service flight in the programme. Earlier flights had focused on testing equipment. This indicated that China had acquired most of the essential technology for starting construction of its space station next year.
Beijing aims to have its own space station and send a human to the moon by 2020, the year the International Space Station is scheduled to retire. That would leave China as the only nation with such a presence in space. China is not part of the ISS – a project jointly backed by the US, the EU, Russia, Japan and Canada – mainly because of US opposition.
Tuesday’s launch, China’s fifth manned mission, comes just 10 years after China sent a human into space, in a reminder of the country’s rapid progress in space technology.
Although its space programme trails the US and Russia by 40 years, it uses newer technology and is progressing faster. Shenzhou-X brings the number of Chinese sent into space to 11.
Given China’s rise to global power status and its rapid military expansion in recent years, observers in the west fret about potential military applications of its space programme .
While Beijing has refused to give much detail about the space programme, it is controlled by the military and indications are that China, like other countries, uses the technology for both military and civilian purposes.
For example, defence analysts believe that China’s increasing number of satellites helps the People’s Liberation Army in improving tracking and targeting systems for its missile forces. But at the same time, small, cheap satellites have become a booming export business for Beijing.
Among the three astronauts manning Shenzhou-X is Wang Yaping, the second woman and the youngest-ever astronaut China has sent into space. The 33-year-old air force transport pilot who holds the military rank of major will teach Chinese primary and middle school students about space in a session transferred via video
link – a move similar to talks delivered by Chris Hadfield, the Canadian astronaut, from the ISS and broadcast on YouTube.
Maj Wang’s lesson will help the children better understand physics principles such as Newton’s laws, and is intended to foster students’ interest in space and science in general, Ms Wu said.
The three astronauts are to perform one manual and one automatic docking with Tiangong I, the space module China sent into orbit in 2011, enter the module and conduct scientific experiments, repeating similar exercises performed last year. But they will also do some maintenance and repair work, a task mirroring that of similar missions to ISS.
After the return of Shenzhou-X, Tiangong I will end its two-year mission and engineers from China Manned Space Engineering Office will start focusing on preparations for the launch of Tiangong II, the full-fledged space station. The station is expected to be less than one-fifth the size of ISS, with a weight of about 60 tonnes.

எலுமிச்சை ரசம்

தேவையான பொருட்கள்:

ரசப் பொடி - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
துவரம் பருப்பு - 100 கிராம்
எலுமிச்சம்பழம் - 2
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தாளிப்பதற்கு
கறிவேப்பிலை - 1 தழை
கடுகு - 1 டீஸ்பூன்


செய்முறை:
* 1 டீஸ்பூன் உப்பு, 1 சிட்டிகை பெருங்காயம் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் (நீள்வாக்கில் நறுக்கவும்) இரண்டு கப் தண்­ர் சேர்த்து, கொதிக்க விடவும்.
* 1 கப் வேகவைத்த துவரம் பருப்பை போட்டு பொருட்கள் முழுவதும் பச்சை வாடை போகும் வரை வேக வைக்கவும்.
* ரசப்பொடியை சேர்த்து இரண்டு நிமிடத்திற்கு சூடு செய்யவும்.
* கடுகு மற்றும் கறிவேப்பிலையை தாளித்து அதில் சேர்க்கவும்.
* அதனை இறக்கி, 2 எலுமிச்சம் பழத்தைப் பிழித்து நன்றாகக் கலக்கவும். பருப்பு வேகவைத்த நீரையும் சேர்க்கவும்.

குறிப்பு: சமைத்து முடிக்கும் வரை ரசத்தை கலக்கக் கூடாது.






அறம்

அம்மா தாயே!

குரல் கொடுத்த
பிச்சைக்காரனை
விரட்டி விட்டு
பிள்ளைக்கு பாடம்
சொல்லித்தந்தாள்
அன்னை!
அறம் செய விரும்பு!

வேலை

உறவுகள் தொலைத்து

கனவுகள் சுமந்து
காற்றினில் கலந்து
எல்லைகள் கடந்து
வந்தேன் இங்கு...
கிடைத்தது என்னவோ
இலவச காற்று மட்டும்தான்


பறவையின் ஒலி

வீட்டுக் கதவு
திறந்து மூடும்போது
தவறாமல் ஒலிக்கிறது
அந்த மரத்தில்
எப்போதோ வாழ்ந்த
பறவையின்
'கி(ரீ)ச்.... கி(ரீ)ச்' சத்தம்!

கல்கியின் பொன்னியின் செல்வன்/முதலாவது அத்தியாயம்

கோடிக்கரையில்
கடலில் அடித்த சுழிக்காற்றுச் சோழ நாட்டுக் கடற்கரையோரத்தில் புகுந்து, தன் துரிதப் பிரயாணத்தைச் செய்து கொண்டு போயிற்று. "கல்லுளிமங்கன் போன வழி, காடு மலையெல்லாம் தவிடுபொடி" என்பது போல, அந்தச் சுழிக்காற்றுப் போன வழியெங்கும் பற்பல பயங்கர நாசவேலைகளைக் காணும்படி இருந்தது. கோடிக்கரையிலிருந்து காவேரிப் பூம்பட்டினம் வரையில் சோழநாட்டுக் கடற்கரையோரங்களில் வாயு பகவானின் லீலை செய்த வேலைகளை நன்கு பார்க்கும் படியிருந்தது. எத்தனையோ மரங்கள் வேரோடு பெயர்ந்தும், கிளைகள் முறிந்தும் கிடந்தன. வீடுகளின் கூரைகளைச் சுழிக் காற்று அப்படியே தூக்கி எடுத்துக்கொண்டு போய்த் தூர தூரங்களில் தூள் தூளாக்கி எறிந்து விட்டிருந்தது. குடிசைகள் குட்டிச் சுவர்களாயிருந்தன. கோடிக் கரைப்பகுதியில் எங்கே பார்த்தாலும் வெள்ளக் காடாயிருந்தது. கடல் பொங்கி வந்து பூமிக்குள் புகுந்து விட்டதோ என்று தோன்றியது. ஆனால் பூமிக்கும் கடலுக்கும் மத்தியில் இருந்த வெண்மணல் பிரதேசம் அந்தக் கொள்கையைப் பொய்ப்படுத்தியது. அந்த வெண்மணல் பிரதேசத்தில் ஆங்காங்குப் புதைசேறு இருந்த இடங்களில் மட்டும் இப்போது அதிகமாகத் தண்ணீர் தேங்கியிருந்தது. அப்படிப்பட்ட இடங்களில் இப்போது மனிதனோ மிருகமோ இறங்கி விட்டால், உயிரோடு சமாதிதான்! யானைகளைக் கூட அப்புதை சேற்றுக் குழிகள் இப்போது விழுங்கி ஏப்பம் விட்டு விடும்!

சுழிக்காற்று அடித்த இரண்டு நாளைக்குப் பிறகு கோடிக்கரைக்குப் பெரிய பழுவேட்டரையரும் அவருடைய பரிவாரங்களும் வந்து சேர்ந்தார்கள். பல்லக்கும் பின்தொடர்ந்து வந்தது. ஆனால் இம்முறை அந்தப் பல்லக்கில் அமர்ந்து இளையராணி நந்தினிதேவியே பிரயாணம் செய்தாள். "மதுராந்தகத் தேவரை அந்தரங்கமாக அழைத்துப்போக வேண்டிய அவசியம் இப்போது இல்லை.மேலும் சில சமயம் இளைய ராணியையும் உடன் அழைத்துப் போனால்தானே மறுபடி அவசிய நேரும் போது மதுராந்தரகரை அழைத்துபோக அந்தப் பல்லக்கு வாகனம் உபயோகமாயிருக்கும்?" இவ்வாறு நந்தினி கூறியதைப் பழுவேட்டரையர் உற்சாகமாக ஒப்புக்கொண்டார். காமாந்தகாரத்தில் மூழ்கியிருந்த அக்கிழவருக்குத் தம்முடன் அந்தப் புவனசுந்தரியை அழைத்துப் போவதில் ஆர்வம் இருப்பது இயல்புதானே?

சுழிக்காற்றுக்கு முன்னால் அவர்கள் நாகைப்பட்டினத்துக்கு வந்திருந்தார்கள். அங்கே தனாதிகாரி தமது உத்தியோகக் கடமைகளை முதலில் நிறைவேற்றினார்.

நாகைப்பட்டினம் அப்போது தமிழகத்தின் முக்கியத் துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாயிருந்தது. வௌிநாடுகளிலிருந்து எத்தனை எத்தனையோ பொருள்கள் பெரிய பெரிய மரக்கலங்களில் வந்து அத்துறைமுகத்தில் இறங்கிக் கொண்டிருந்தன. அப்பொருள்களை ஆயிரக்கணக்கான சிறிய படகுகள் ஏற்றிக் கொண்டு வந்து கரையில் சேர்த்தன. கரையிலிருந்து மாற்றுப் பண்டங்களை ஏற்றிக்கொண்டு போய் மரக்கலங்களில் சேர்த்தன. இவற்றுக்கெல்லாம் சுங்க திறை விதித்து வசூலிக்கும் அதிகாரிகள் பலர் இருந்தனர். அவர்கள் சரிவர வேலை செய்கிறார்களா என்பதை மேற்பார்வை பார்ப்பது சோழ நாட்டுத் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையரின் உரிமையும், கடமையும் அல்லவா?

அந்த வேலை பூர்த்தியான பிறகு பெரிய பழுவேட்டரையர் நாகைப்பட்டினத்தில் புகழ் பெற்றிருந்த சூடாமணி புத்த விஹாரத்துக்கும் விஜயம் செய்தார். பிக்ஷூக்கள் அவரைத் தக்கபடி வரவேற்று உபசரித்தனர். புத்தவிஹாரத்துக்குத் தேவை ஏதேனும் உண்டா, பிக்ஷூகளுக்குக் குறைகள் ஏதேனும் உண்டா என்று தனாதிகாரி விசாரித்தார். ஒன்றும் இல்லையென்று பிக்ஷூக்கள் கூறி, சுந்தர சோழ மன்னருக்குத் தங்கள் நன்றியையும் தெரிவித்தார்கள்.

சில நாளைக்கு முன் இந்த விஹாரத்தைச் சேர்ந்த பிக்ஷூக்கள் இருவர் தஞ்சைக்குச் சக்கரவர்த்தியைப் பார்க்க வந்திருந்தார்கள். புத்தசங்கத்தின் சார்பாகச் சுந்தரசோழர் விரைவில் நோய் நீங்கிக் குணம் அடையவேண்டும் என்ற வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.அப்போது அவர்கள் இளவரசர் அருள்மொழிவர்மர் இலங்கையில் புத்த தர்மத்துக்குச் செய்துவரும் தொண்டுகளைக் குறித்துத் தங்கள் பாராட்டுதலைத் தெரிவித்தார்கள். இடிந்து போன புத்த விஹாரங்களைப் புதுப்பித்துக் கொடுக்கும்படியாக இளவரசர் கட்டளையிட்டு நிறைவேற்றியும் வருவது இலங்கையில் உள்ள புத்த பிக்ஷூக்களின் மகா சங்கத்துக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்து வருவதாகவும் அவர்கள் கூறினார்கள்.

"சக்கரவர்த்திப் பெருமானே! இன்னும் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியும் நாங்கள் கேள்விப்படுகிறோம். இலங்கையின் பழமையான சிம்மாசனத்தைத் தங்களுடைய இளைய திருக்குமாரருக்கே அளித்து இலங்கை அரசராக முடி சூட்டி விடலாம் என்று பிக்ஷூக்களில் ஒரு பெரும் பகுதியார் கருதுகிறார்களாம்! அவ்விதம் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்! இதைக் காட்டிலும் நம் இளவரசரின் பெருமைக்கு வேறு என்ன சான்று வேண்டும்!" என்றார்கள்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த பெரிய பழுவேட்டரையரின் உள்ளத்தில் ஓர் அபூர்வமான யோசனை உதயமாயிற்று. பிக்ஷூக்கள் சென்ற பிறகு அதைச் சுந்தர சோழச் சக்கரவர்த்தியிடமும் தெரிவித்தார். "மூன்று உலகும் ஆளும் இறைவா! தங்கள் அதிகாரம் எட்டுத்திசையிலும் பரவி நிலைபெற்றிருக்கிறது. இந்தப் பரந்த பூமண்டத்தில் தங்கள் ஆணைக்குக் கீழ்ப்படியாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் தங்கள் திருப்புதல்வர்கள் இருவர் மட்டும் இதற்கு விலக்காயிருக்கின்றனர். அவர்களுக்குத் துர்ப்புத்தி புகட்டும் சிலர் சோழ மகாராஜ்யத்தில் பெரிய பதவிகள் வகிக்கிறார்கள். ஆதித்த கரிகாலர் தங்கள் விருப்பத்தின்படி இங்கு வருவதற்கு மறுத்து தங்களைக் காஞ்சிக்கு வரும்படி ஓலை அனுப்புகிறார். அவருக்கு இவ்வாறு துர்புத்தி புகட்டுகிறவர் வேறு யாரும் இல்லை; தங்கள் மாமனாரான திருக்கோவலூர் மலையமான்தான். அவ்வாறே ஈழ நாட்டிலிருந்து தங்கள் இளம் புதல்வரைத் தருவிக்கும் படியாகத் தாங்கள் பன்முறை சொல்லிவிட்டீர்கள். நானும் ஆள் அனுப்பி அலுத்து விட்டேன். நமது ஆட்கள் இளவரசரைச் சந்திக்காத படியும் நம் ஓலை இளவரசரைச் சேராதபடியும் அந்தக் கொடும்பாளூர்ப் பெரிய வேளான் செய்துகொண்டு வருகிறான். இல்லாவிடில், தங்கள் அருமைப் புதல்வர் தங்கள் விருப்பந் தெரிந்த பிறகும் இத்தனைகாலம் வராமல் தாமதிப்பாரா? இந்நிலைமையில் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. தாங்கள் கட்டளையிட்டால் அதைத் தெரிவிக்கிறேன்" என்றார் பழுவேட்டரையர்.

சக்கரவர்த்தி சம்மதம் கொடுத்ததின்பேரில் தனாதிகாரி தெரிவித்தார். "இலங்கைச் சிம்மாதனத்தைக் கவர்ந்து முடி சூட்டிக்கொள்ளச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டி இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி கட்டளை பிறப்பித்து அனுப்புவோம். அத்தகைய கட்டளையைப் பூதி விக்கிரமகேசரி தடை செய்ய முடியாது. அன்றியும், இளவரசரிடம் நேரில் எப்படியேனும் கட்டளையைச் சேர்ப்பிக்கச் செய்துவிட்டால் இளவரசர் கட்டாயம் வந்தே தீருவார்!"

இதைக் கேட்ட சுந்தர சோழர் புன்னகை புரிந்தார். விசித்திரமான யோசனைதான்; ஆயினும் ஏன் கையாண்டு பார்க்கக் கூடாது? பொன்னியின் செல்வனைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் சக்கரவர்த்தியின் மனதில் பொங்கிக் கொண்டிருந்தது. தம்முடைய அந்திம காலம் நெருங்கிக் கொண்டிருப்பதாக அவர் உணர்ந்தார். ஆகையால் தம் அந்தரங்க அன்புக்குரிய இளங்கோவிடம் இராஜ்யத்தைப் பற்றித் தம் மனோரதத்தை வௌியிட விரும்பினார். மதுராந்தகனுக்கே தஞ்சாவூர் இராஜ்யத்தை அளிக்க வேண்டும் என்ற தம் விருப்பத்தை அறிந்தால் அருள்மொழிவர்மன் மறுவார்த்தையே பேசாமல் அதை ஒப்புக்கொள்வான். பின்னர் அவன் மூலமாக ஆதித்த கரிகாலனுடைய மனத்தை மாற்றுவதும் எளிதாயிருக்கும்.

இவ்வாறு சிந்தித்துத் தனாதிகாரியின் யோசனையைச் சக்கரவர்த்தி ஆமோதித்தார். அதன் பேரில்தான் அருள்மொழிவர்மரைச் சிறைப்படுத்தி வரும்படி கட்டளை அனுப்பப்பட்டது. இளவரசருக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படக்கூடாது என்ற கண்டிப்பான கட்டளையும் மரக்கலத் தலைவனுக்குப் பிறப்பிக்கப்பட்டது.

மேற்கூறிய கட்டளையுடன் இருமரக்கலங்கள் ஈழநாட்டுச் சென்ற பிறகு, பெரிய பழுவேட்டரையர் சிறிது மனக்கவலை கொண்டார். இளவரசருக்கு ஏதேனும் நேர்ந்தது விட்டால் தனக்கு பெரும் பழி ஏற்படும் என்பதை உணர்ந்தார். ஆகையால் தாமே நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு நேரே சென்றிருந்து, இளவரசரைத் தக்கபடி வரவேற்றுத் தமது சொந்தப் பொறுப்பில் அவரைத் தஞ்சாவூருக்கு அழைத்துக் கொண்டு வர விரும்பினார்.

இந்த யோசனைக்கு இன்னும் சில உபகாரணங்களும் இருந்தன. இளவரசர் தஞ்சைக்கு வந்து சக்கரவர்த்தியைப் பார்ப்பதற்கு முன்னால் செம்பியன்மாதேவியோ, குந்தவையோ அவரைப் பார்க்கும்படி விடக்கூடாது. அந்தப் பெண்கள் இருவரும் இளவரசர் மீது மிக்க செல்வாக்கு உள்ளவர்கள்; பழுவேட்டரையரை வெறுப்பவர்கள். ஆகையால் இளவரசரிடம் ஏதாவது சொல்லி அவர் மனத்தைக் கெடுத்து விடுவார்கள். தக்க சமயம் வருவதற்குள், அதாவது சுந்தரசோழர் மரணம் அடைவதற்குள், ஏடாகூடமாக ஏதேனும் நடந்து, காரியங்கள் கெட்டுப் போகலாம்.

அன்றியும், பொக்கிஷ நிலவறையில் சுரங்க வழிக்காவலன் பின்னாலிருந்து தாக்கி வீழத்தப்பட்டதிலிருந்து தனாதிகாரியின் மனத்தில் ஏதேதோ விபரீத சந்தேகங்கள் உதித்திருந்தன. பொக்கிஷ சாலையில் யாராவது ஒளிந்திருக்கக்கூடுமா? அப்படியானால் அது யாராயிருக்கும்? தஞ்சைக் கோட்டைக் காவலர்களிடம் அகப்படாமல் தப்பிச் சென்ற வாணர்குல வீரனாயிருக்குமா? அங்ஙனமானால் அவன் இன்னும் பல இரகசியங்களை அறிந்திருக்கக்கூடும் அல்லவா?

சின்னப் பழுவேட்டரையர் கூறுகிறபடி நந்தினியைப் பார்க்க அடிக்கடி வரும் மந்திரவாதிக்கு இதில் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா? அதையும் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். இளைய பிராட்டி குந்தவை தேவிதான் வந்தியதேவனை ஓலையுடன் இளவரசர் அருள்மொழிவர்மரிடம் அனுப்பியிருக்கிறாள் என்னும் செய்தியும் தனாதிகாரியின் மனத்தைக் கலங்கச் செய்திருந்தது. வந்தியத்தேவன் மூலம் என்ன செய்தி அனுப்பியிருப்பாள்? தாமும் சம்புவரையர் முதலியவர்களும் சோழ சிம்மாசனத்தைப் பற்றி முடிவு செய்துள்ள யோசனையைப் பற்றி அந்தப் பெண் பாம்புக்குச் செய்தி எட்டியிருக்குமோ? அதைப்பற்றி ஏதேனும் அவள் எழுதி அனுப்பியிருப்பாளோ?

எப்படியிருந்த போதிலும் இளவரசர் சோழநாட்டின் கரையில் இறங்கியதும், தாம் அவரை முதலில் சந்திப்பதுதான் நல்லது. வந்தியதேவனையும் இளவரசருடன் சிறைபடுத்திக் கொண்டுவரக் கட்டளையிட்டிருப்பதால் அவனையும் முதலில் தாம் பார்த்தாக வேண்டும். அவனுக்கு என்னென்ன தெரியும், எவ்வளவு தூரம் தெரியும் என்பதையும் கண்டு பிடித்தாக வேண்டும்.

இப்படியெல்லாம் யோசித்துப் பெரிய பழுவேட்டரையர் நாகைப்பட்டினத்துக்குப் போய்க் காத்திருக்கத் தீர்மானித்தார். அவருக்கு இருந்த காரணங்களைக் காட்டிலும் அதிகமாகவே நந்தினிதேவிக்கு இருந்தன. வந்தியத்தேவனை மறுபடி பார்க்கவும் குந்தவை அவனிடம் என்ன ஓலை கொடுத்து அனுப்பினாள் என்பதை அறிந்து கொள்ளவும் நந்தினி மிக்க ஆவலாயிருந்தாள். மந்திரவாதி ரவிதாஸன் போன காரியம் எவ்வளவு தூரம் வெற்றியடைந்தது என்று அறியவும் ஆர்வம் கொண்டிருந்தாள். ஆகையால் நாகைப்பட்டினத்துக்குத் தானும் வருவதாகக் கூறினாள். கரும்பு தின்னக் கூலி வேண்டுமா? கிழவர் உடனே அதற்கு இசைந்தார். கடலில் கரையோரமாக உல்லாசப் படகில் ஏறி நந்தினியுடன் ஆனந்தப் பிரயாணம் செய்வது பற்றி அவர் மனோராஜ்யம் செய்யலானார். அவர் உள்ளத்தையும் உடலையும் எரித்துக் கொண்டிருந்த தாபம் அதன்மூலம் தீர்வதற்கு வழி ஏற்படலாம் என்றும் ஆசை கொண்டார்.

பழுவேட்டரையரும், நந்தினியும் நாகைப்பட்டினத்திலிருந்தபோதுதான் சுழற் காற்று அடித்தது. காற்றின் உக்கிர லீலைகளை நந்தினி வெகுவாக அநுபவித்தாள். கடற்கரையோரத்தில் தென்னை மர உயரத்துக்கு அலைகள் எழும்பி விழுவதைப் பார்த்துக் களித்தாள். ஆனால் கடலில் உல்லாசப் படகில் ஆனந்த யாத்திரை செய்யலாம் என்னும் பழுவேட்டரையரின் மனோராஜ்யம் நிறைவேறவில்லை.

சுழிக்காற்று அல்லோலகல்லோலப்படுதி விட்டுப்போன பிறகு, கடலிலே கப்பல்களுக்கும் படகுகளுக்கும் சேதம் உண்டா என்பதைப் பற்றிப் பழுவேட்டரையர் விசாரித்து அறிந்தார். கரையோரத்தில் அனைவரும் சுழிக்காற்று வரப்போவதை அறிந்து ஜாக்கிரதையாயிருந்த படியால் அதிகச்சேதம் ஏற்படவில்லையென்று தெரிந்தது. ஆனால் நடுக்கடலில், ஈழத்துக்கும் கோடிக்கரைக்கும் நடுவில், இரு கப்பல்கள் தத்தளித்ததாகவும், அவற்றில் ஒன்று தீப்பற்றி எரிந்து முழுகியதாகவும் கட்டு மரங்களில் மீன் பிடிக்கச் சென்றிருந்த வலைஞர்கள் சிலர் கூறினார்கள். இது பழுவேட்டரையருக்கு மிக்க கவலையை உண்டாக்கிற்று. அந்த இரண்டு மரக்கலங்களும் இளவரசரைச் சிறைப்பிடித்து வந்த கப்பல்களாயிருக்கலாம் அல்லவா? அப்படியானால் இளவரசரின் கதி யாதாகியிருக்குமோ? இளவரசருக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் தனக்குப் பெரும் பழி ஏற்படுமே? சோழ நாட்டு மக்களின் எல்லையற்ற அன்பைக் கவர்ந்தவராயிற்றே, அருள்மொழிவர்மர். மக்களுக்கு அவரைப் பற்றி என்ன சொல்வது? சக்கரவர்த்திக்குத்தான் என்ன சமாதானத்தைக் சொல்வது? - நிச்சயமான செய்தி தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் பேராவல் அவருக்கு உண்டாயிற்று. கோடிக்கரைக்குப் போனால் ஒருவேளை விவரம் தெரியலாம்.மூழ்கிய கப்பலை நன்றாய்ப் பார்த்தவர்கள் அங்கே இருக்கக்கூடும். மூழ்கிய கப்பலிலிருந்து தப்பியவர்கள் யாரேனும் கரை சேர்ந்திருக்கவும் கூடும். ஆம்; உடனே கோடிக்கரைக்குப் போக வேண்டியதுதான்!

இந்த எண்ணத்தை நந்தினியிடம் வௌியிட்டதும் அவள் ஆர்வத்துடன் அதை ஒப்புக்கொண்டாள். "கோடிக்கரையை நான் இதுவரையில் பார்த்ததில்லை. அந்தப் பிரதேசம் மிக அழகாயிருக்கும் என்று கேளிவிப்பட்டிருக்கிறேன். இச்சந்தர்ப்பத்தில் அதையும் பார்த்துவிடலாம்" என்றாள் நந்தினி.

நாகைப்பட்டினத்திலிருந்து கோடிக்கரைக்கு இரண்டு வழிகள் உண்டு. கடற்கரையோரமாகச் சென்ற கால்வாய் வழியாகப் படகில் ஏறிப் போகலாம். அல்லது சாலை வழியாகவும் போகலாம். பழுவேட்டரையரின் பரிவாரங்கள் அதிகமாயிருந்தபடியால் சாலை வழியாகவே போனார்கள். மேலும் நந்தினி கால்வாய் வழியை விரும்பவும் இல்லை. கால்வாயில் படகில் போனால் பழுவேட்டரையர் தம் காதல் புராணத்தைத் தொடங்கிவிடுவார் என்று நந்தினி அஞ்சியது ஒரு காரணம். அது மட்டும் அன்று, சாலை வழியாகச் சென்றால் கடற்கரையோரத்தில் வந்து ஒதுங்கும் கட்டுமரக்காரர்களையும் படகோட்டிகளையும் விசாரித்துக்கொண்டு போகலாம் அல்லவா?

வழியில் அப்படி விசாரித்ததில் புதிய செய்தி ஒன்றும் தெரியவில்லை. நடுக்கடலில் சுழிக்காற்றுப் பலமாக அடித்த சமயம் கப்பல் ஒன்று தீப்பட்டு எரிந்ததைப் பார்த்ததாக மட்டும் இன்னும் சிலரும் கூறினார்கள். கோடிக்கரையை அடைந்ததும் கலங்கரை விளக்கத்தின் காவலர் தியாக விடங்கர் தமது எளிய வீட்டைப் பழுவேட்டரையர் தம்பதிகளுக்காக ஒழித்துக் கொடுப்பதாகச் சொன்னார். அதை ஏற்கும்படி மன்றாடிக் கேட்டுக்கொண்டார். கோடிக்கரையில் தங்குவதற்கு வேறு மாட மாளிகை கிடையாது. எனினும் நந்தினி அதை மறுத்துவிட்டாள். கலங்கரை விளக்கிற்கு அருகில் கூடாரம் போட்டுக்கொண்டு தங்க விரும்புவதாகக் கூறினாள்.

அவ்வாறே கூடாரங்கள் அடிக்கப்பட்டன. சற்றுத் தூரத்தில் ஆங்காங்கு பழுவூர்ப் பரிவாரங்களுக்கும் கூடாரங்கள் போடப்பட்டன. கூடாரங்கள் அடித்து முடித்தவுடனே கடலில் ஒரு பெரிய மரக்கலம் காணப்பட்டது. அது கரையோரமாக எவ்வளவு தூரம் வரலாமோ அவ்வளவு தூரத்தில் வந்து நின்றது.

அதைக் கண்டதும், பழுவேட்டரையரின் பரபரப்பு மிகுந்தது. கப்பலின் பாய்மரங்கள் சின்னாப்பின்னமாகியிருந்ததிலிருந்து அது சுழிக்காற்றில் அகப்பட்டிருக்க வேண்டுமென்று தௌிவாயிற்று. அதில் இருப்பவர்கள் யார்? ஒரு வேளை இளவரசராயிருக்கலாமோ? புலிக்கொடி காணப்படாததில் வியப்பில்லை. சுழிக்காற்றில் அது பிய்த்து எறியப்பட்டிருக்கலாம் அல்லவா?

கப்பலண்டை போய்த் தகவல் தெரிந்து கொண்டு வருவதற்காகப் பழுவேட்டரையர் அங்கிருந்து ஒரு படகை அனுப்பி வைத்தார். கப்பலிலிருந்தவர்கள் படகுக்காகக் காத்திருந்ததாகத் தோன்றியது. உடனே இருவர் கப்பலிலிருந்து படகில் இறங்கினார்கள். அவர்களில் ஒருவன் பார்த்திபேந்திர பல்லவன்.

வந்தியத்தேவனைக் காப்பாற்றுவதற்காக மரக்கலத்திலிருந்து படகில் இறங்கிச் சென்ற இளவரசர் அருள்மொழிவர்மர் திரும்பக் கப்பலுக்கு வரவேயில்லை அல்லவா? இதனால் பார்த்திபேந்திரன் எல்லையற்ற கவலைக்கு உள்ளாகித் தத்தளித்தான். காற்று அடங்கிப் பொழுந்து விடிந்தபிறகு அங்குமிங்கும் கப்பலைச் செலுத்தித் தேடினான். படகில் இளவரசருடன் இறங்கியவர்களில் ஒருவன் மட்டும் குற்றுயிராக அகப்பட்டான். அவன் வந்தியத்தேவனை இளவரசர் மிக்க தீரத்துடன் காப்பாற்றிய பிறகு படகுக்கு நேர்ந்த கதியைச் சொன்னான். இதனால் பார்த்திபேந்திரனுடைய துயரம் பன்மடங்கு ஆயிற்று. ஒருவேளை கோடிக்கரை சென்று உயிருடன் ஒதுங்கியிருக்கக் கூடாதா என்ற ஆசை ஒரு பக்கத்தில் கிடந்து அடித்துக்கொண்டது.

ஆகவே கோடிக்கரை சென்று விசாரிப்பதென்று தீர்மானித்தான். அதற்காகவே கப்பலை அங்கே கொண்டுவந்து நிறுத்தச் செய்தான். படகில் இறங்கிய பிறகு கரையை நோக்கிப் போக ஆரம்பித்ததும் பெரிய பழுவேட்டரையர் தம் இளைய ராணி சகிதமாக அங்கு வந்திருப்பதை அறிந்துகொண்டான். இது அவனுக்கு மிக்க எரிச்சலை மூட்டியது.

பழுவூர் இளையராணி நந்தினியைப்பற்றி ஆதித்தகரிகாலர் கூறியவையும் நினைவுக்கு வந்தன. அவ்விதம் அந்த மகாவீரரின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டு அவரைப் பித்துப் பிடிக்க அடித்த மோகனாங்கி எப்படியிருப்பாள் என்று பார்க்கும் சபலமும் அவன் உள்ளத்தின் அடிவாரத்தில் ஒரு மூலையில் எழுந்தது. அந்த விருப்பம் விரைவில் வளர்நது கொழுந்துவிடத் தொடங்கியது. ஒருவேளை அவளைப் பார்க்க முடியாமற் போய் விடுமோ என்ற கவலையும் உண்டாகிவிட்டது.

ஆனால் அந்தக் கவலை நீடித்திருக்கவில்லை. படகிலிருந்து கரையில் இறங்கியதும் நேரே பழுவேட்டரையரின் கூடாரத்துக்குப் பார்த்திபேந்திரனை அழைத்துப் போனார்கள்.கூடாரத்தின் வாசலில் பழுவேட்டரையர் கம்பீரமான தோற்றத்துடன் நின்று கொண்டிருந்தார்.ஆஜானுபாகுவான அந்த வீராதி வீரரைக் 'கிழவர்' என்று சொல்லுவது எவ்வளவு பெரிய தவறு என்று பார்த்திபேந்திரன் எண்ணினான். அவன் பார்த்திருக்கும் எத்தனையோ இளம் பிராய வாலிபர்களைக் காட்டிலும் அவர் தேகக்கட்டும், மனோதிடமும் வாய்ந்த புருஷ சிங்கமாகக் காட்சி அளித்தார்.

இவ்விதம் அவன் எண்ணிக் கொண்டிருக்கும்போதே கூடாரத்துக்கு உள்ளேயிருந்து மங்கை ஒருத்தி வௌிவந்தாள். மேகங்களுக்குப் பின்னாலிருந்து மின்னல் தோன்றுவதுபோல அந்தப் பொன் வண்ணப் பூவை கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் திகழ்ந்தாள். நெடிது வளர்ந்து உரம்பெற்ற தேக்கு மரத்தின் பேரில் படர்ந்திருக்கும் அழகிய பூங்கொடியைப் போல் அவள் பழுவேட்டரையருக்கு முன்னால் வந்து நின்றாள். அந்தப் புவன மோகினியைக்கண்டு திகைத்து நின்ற பார்த்திபேந்திரன் பேரில் தனது வேல் விழிகளைச் செலுத்திய வண்ணமாக அவள், "நாதா! இந்த வீர புருஷர் யார்? இவரை நான் இதுவரையில் பார்த்ததில்லையே?" என்று சொன்னாள். பொற் கிண்ணத்திலிருந்து அருந்திய மதுபானத்தைப் போல் அவளுடைய கிளி மொழிகள் பார்த்திபேந்திரனைப் போதை கொள்ளச் செய்தன.

கோரல் டிரா - வரலாறு 1



வணக்கம் நண்பர்களே !

உங்களை இந்த கட்டுரையின் மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...

அதற்கு மிக முக்கியமாக அனு அவர்களுக்கு மிக்க நன்றி. கணிணியில் வரையலாம் வாங்க!!! திரியில் #47 பின்னூட்டத்தில் அவர் கேட்டகேள்விக்கு ஆஹா நாமும் கிட்டதட்ட 12 வருடங்களாக கோரல்டிரா 4 இல் இருந்து உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதன் பூர்வீகத்தை நாம் சரியாக தெரிந்து கொள்ளவில்லையே என்று நினைத்து அதற்கான தேடலை தொடங்கிய போது எனக்கே தெரியாத பல சுவாரசியமான செய்திகள் கிடைத்தன. அதை உங்களிடத்தில் கொண்டு வந்து சேர்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த தொடரை எழுத தூண்டிய அனு அவர்களுக்கும் அந்த திரி தொடங்கி அந்த கேள்வியை கேட்க தூண்டிய ஆதவா அவர்களுக்கும் நன்றி தெரிவித்து இதோ ஆரம்பிக்கிறேன்.

முன்னுரை

கோரல் டிரா இந்த பெயர் உலகம் முழுவதும் உள்ள அனைத்து பத்திரிக்கை, அச்சகத்துறை, விளம்பரத்துறை, வடிவமைப்பத்துறை இன்னும் பல துறைகளில் அடிக்கடி ஒலிக்கும் பெயர். உலகத்தில் உள்ள அனைத்து கணனியிலும் கிட்டதட்ட 80% இந்த கோரல்டிரா நிறுவப்பட்டிருக்கிறது என்பது உண்மை. இன்றைய தேதியில் கோரல் டிரா இல்லாத கணனியை நினைக்க முடியாது அப்படி கலந்து விட்ட மாபெறும் மென்பொருளின் வெற்றிக் கதை...

1. கோரல் நிறுவனத்தின் தொடக்கம்...


கோரல் (Corel) என்னும் நிறுவனத்தை தொடங்கிய Michael Cowpland 23 ஏப்ரல் 1943ல் இங்கிலாந்தில் பிறந்தார். லண்டன் இம்பீரியல் கல்லூரியில் Bsc பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் அவர்கள் குடும்பத்துடன் கனடாவிற்கு இடம் பெயர்ந்தார்கள். Michael Cowpland தனது மேற்படிப்பையும் (1968) Ph.D.யும் (1973) ஒட்டவாவில் உள்ள கேரலிடன் பல்கலைகழகத்தில் முடித்தார். பின்னர் Bell Northern Research ல் வேலை செய்தார். 1973ல் MicroSystems International என்ற பெயர் மாறியது. அந்த நிறுவனத்தில் உடன் பணியாற்றியவர் Terry Matthews. பின்னர் Michael Cowpland, Terry Matthews இருவரும் இணைந்து Mitel Networks என்ற நிறுவனத்தை நிறுவினார்கள். அந்த நிறுவனம் தனியார் கிளை தொலைபேசி இணைப்பக மின்னனு இயந்திரத்தை உருவாக்கி விற்பனை செய்தார்கள். தொடக்கத்தில் நல்ல வெற்றிகரமாக இயங்கி அந்த நிறுவனம் இந்த இருவரையும் மில்லினர்களாக்கியது. மிக அதிகமாக 250மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை நடந்தது(தற்போது நம்ம ஊர் மதிப்புக்கு 4 கோடி). ஆனாலும் அதிக விரிவுபடுத்துதாலும் மேம்படுத்து பிரச்சனைகளாலும் British Telecom என்ற நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்கள். 1984ல் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களிடம் உள்ள வேற்றுமையால் Michael Cowpland, Terry Matthews இருவரும் அதில் இருந்து வெளியேறினார்கள். Terry Matthews தான் தனியாக Newbridge Networks என்னும் நிறுவனத்தை கொடங்கினார்.

1985 வருடம் Michael Cowpland தனியாக ஒரு ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கினார். "Cowpland Research Laboratory" என்ற பெயரில் தொடங்கப்பட்டு பின்னர் Corel என்று எல்லாராலும் அறியப்பட்டது(Corel என்பதன் விரிவாக்கம் "Cowpland Research Laboratory"). இன்டெல் அடிப்படையான மென்பொருளை உருவாக்க ஆரம்பித்தது. DTP என்னும் தொழில் நுட்பத்தில் மென் பொருள் உருவாக்கும் முதல் தனியான நிறுவனம் என்பது இதுதான்.

(DTP - Desktop publishing என்பது வடிவமைப்பு, புத்தகத்திற்கு தட்டச்சு செய்தல், பக்க வடிவமைத்தல், Image என்றும் போட்டோவை தொகுத்தல்(Editing), அட்டைப் பெட்டி (Package) வடிவமைப்பு, வெளிப்புற விளம்பர வடிவமைப்பு என்ற பல வகையான வடிமைப்புக்கு ஒட்டு மொத்தமாக DTP - Desktop publishing என்று பெயர்)


Michael Cowpland .......................... ஒட்டவாவில் உள்ள அவரது இல்லம் ...................................... கோரல் டிரா தொகுப்பு 1
நிறுவனர்,
கோரல் கார்பொரேசன்.

1. கோரல்டிராவின் முதல் தொகுப்பு வெளியீடு...

பலவடிவங்களுக்கு பின் உருவானதுதான் கோரல்டிரா. கோரல் நிறுவனத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட Michel Bouillon மற்றும் Pat Beirne ஆகியோரால் பல மென்பொருட்கள் உருவாக்கப்பட்டது. அதில் மிகவும் வெற்றிகரமானது என்று நினைக்கப்பட்ட CorelDRAWவும் அந்த காலகட்டத்தில்தான் உருவானது. 1989ல் முதன்முதலாக CorelDRAWவின் 1வது தொகுப்பு வெளிவந்தது. மிக அற்புதமான வரவேற்பை பெற்றது முதல் தொகுப்பு. அடுத்தாக அதன் உழைப்பு மிகவும் அற்புதமானது.

(தொடரும்)

தங்கை


அன்பு தங்கை என்று

ஒரு தேவதை

அன்புடன் இருந்தால்

இப்படித்தான் இருப்பாள்

என்ற எண்ணத்தை என்னுள்

விதைத்த இந்த ஆலமரம்

விழுது மண்ணில் விழுவதற்குள்

மறைந்து விட்டதே

சில மணி நேரங்களே

பேசியிருந்தாலும் அந்த

முகம் அறியாத பாச மலரை

மறக்க முடியவில்லை அன்பு

தங்கை நீ ஒவ்வொரு முறை

அழைக்கும் அண்ணா என்ற

அற்புதமான வார்த்தை

மரணநேரத்திலும் மறக்க முடியுமா

தங்க தாமரையே ஏன் என்னிடம்

இது வரை பேசவில்லை

உள்ளம் மட்டும் அல்ல

உடலும் சேர்ந்து வாடுகிறது

உன்னுடைய வார்த்தைகளும்

ஓராயிரம் அன்பு சக்தியை தாங்கி வரும்

மீண்டும் அந்த ஒலியை என் செவிகள்

கேட்டுமா அந்த சகோதரி இங்கு

வந்து பின்னூட்டம் இடுமா?

காத்திருப்பது நான் மட்டும் அல்ல

எனது கைபேசியும் தான்

கலங்க விடாமல் மீண்டும்

கதைப்பாயா என்னை ஈன்றவளே...

வேண்டும்

சீராட்டி தலைவாரி பள்ளி அனுப்பும் -
அம்மா வேண்டும்
சிற்றுண்டி வாங்கி உண்ண பணம் தரும் -
அப்பா வேண்டும்
மகிழ்ச்சியான வாழ்வு வாழ -
வீடு - உறவுகள் வேண்டும்
நண்பரோடு ஓடி விளையாட -
பள்ளிப் பருவம் வேண்டும்
பட்டம் வரை கல்வி பயில -
பண வசதிகள் வேண்டும்
ஏழை சிறார் நிலை ஒழிக்க -
கலெக்டர் / பிரதமர் ஆக வேண்டும்
அடுக்குகிறேன் கனவுகளை
சாலையோர நாயகனாக!
__________________

தனிமை


அரவணைக்கும் அன்னை இழந்து
வழிகாட்டும் தந்தை இழந்து
வாழ்வைப் பகிரும் சகோதரர் இழந்து
தோள்கொடுக்கும் நண்பர் இழந்து
ஓடி விளையாடிப் பள்ளி பயிலும் வயதினில்
என் முழு வாழ்விழந்து - சாலையோரத்தில் அனாதரவற்று

இறைவா
இழப்புகள் அனைத்தும் இத்துடன் இழக்கட்டும்
இழப்பற்ற சமுதாயம் நன்றே மலரட்டும்
இன்பகர வாழ்வு எல்லோர்க்கும் உதிக்கட்டும்
யுத்தமெனும் வார்த்தை அகராதி இழக்கட்டும்
__________________

அன்னை


மனதிலே குழப்பங்கள்
மாறிடுமா வாழ்க்கை
மனதில் உள்ள ரணங்கள்
மாற்றிட அன்னை இல்லை
மனதின் குமுறல்கள்
மாற்றிட நினைக்கிறேன் முடியவில்லை
மகிழ்ச்சி தொடுகிறேன் கிடைக்கவில்லை
மனதின் கசப்புகள் கசிகிறது கண்ணீர்
கண்ணீருக்கு பதில் அன்பு
அந்த அன்பு எப்போது எனக்கு இங்கு

விருந்து

அவன் காத்திருக்கிறான்
வாழை இலை விருந்திற்காக
குப்பைத் தொட்டியின் அருகில்

சுண்டல்

காதலிக்கிறார்கள்
படகின் மறைவில்
சுண்டலுக்குப் பயந்து

பிரசவம்

உயிரை கொடுத்து
உயிரை உலகதிற்க்கு
அறிமுகம்படுத்தும்பொழுது
அவளது வலிகளுக்காக
அழுகையுடன் பிறந்து குழந்தை...

யாரறிவு ஆறறிவு????

பழுத்துவிழும் இலைகளை
எருவாக்கி விருட்சமா(க்கு)வது
ஓரறிவு ஜீவன்களாம்..!

சருகாக உருவகிப்பது
ஆறறிவு ஜீவன்களாம்.

யாரறிவு ஆறறிவு????

சங்க இலக்கியம் காட்டும் தமிழர் சமுதாயம்.

பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. பரிபாடல்-திரட்டு 8:7-12

பூவினுள் பிறந்தோன்-
பிரம்மாநான்மறைக் கேள்வி
நவில் குரல் எடுப்ப- ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் முழக்கம்
அந்தணர் ஓதவஞ்சியும் -சேர தலைநகர்
- வஞ்சிகோழியும்- உரையூர்- சோழ தலைநகர்கோழியின் எழாது- சேவல் கூவலில் எழ

பாண்டி நாட்டு தலைநகர் மதுரைவாசி சொல்கிறார்: சேர தலைநகர்- வஞ்சிவாழ் மக்களும், உரையூர் சோழ தலைநகர்வாழ் மக்களும் தினமும் அதிகாலை சேவல் கூவலில் எழுகின்றனர். நாங்கள் அதிகாலையில் அந்தணர் ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் ஓதும் முழக்கம் கேட்டு எழுகிறோம் என பெருமை கொள்கின்றார்.

பின்குறிப்பு: பாவணர் வழியோர்படி சங்கம்,
சமுதாயம் இரண்டும் சமஸ்க்ருத சொற்கள்,
அவற்றின் தமிழ் கழகம், குமுகாயம்.

உலக மொழிகளில் சிறந்தது தமிழ் எவ்வாறு?

( தமிழர் ஆன்மவியலும் - தமிழர் சமயமும் - தமிழர் சமய மாநாடும் )
முனைவர்.மு.தெய்வநாயகம்

man is a soicial animal"என்பது ஆங்கில மொழியிலுள்ள பழமொழி. ஆங்கிலம் இன்று உலகப் பொது மொழியாக இருக்கிறது. உலகிலுள்ள அறிஞர் பெருமக்கள் அனைவரும், தாங்கள் எந்த மொழியைச் சார்ந்தவர்களாக இருந்த போதிலும், தங்கள் கருத்துக்கள் உலகம் முழுவதும் அறியப்பட வேண்டுமென விரும்பினால், அவர்கள் ஆங்கில மொழியில் எழுதுவது அவர்களுக்கு இன்றியமையாததாய் ,இருக்கிறது. இதனால் ஆங்கில மொழி உலக அறிஞர்களால் வளப்படுத்தப்படுகிறது. உலக அறிஞர்களால் வளப்படுத்தப்பட்டுள்ள ஆங்கில மொழியிலுள்ள இந்தப் பழமொழி தவறானது என்பதைத் தமிழ் மொழியிலுள்ள ஆன்மவியல் நிரூபிக்கிறது. எவ்வாறு?மனிதன் வேறு, விலங்கு வேறு. மனிதனுக்கும் விலங்குக்கும் வேறுபாடு தெரியாத நிலையில் இந்த ஆங்கிலப்பழமொழி உலக அறிஞர்கள் மத்தியில் நிலை கொண்டிருக்கிறது. மனிதன் ஆறாவது அறிவை உடையவன் ஆனால் விலங்குகளுக்கு ஆறாவது அறிவு கிடையாது என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ள செய்தி, ஆறாவது அறிவைப் பற்றித் தெளிவில்லாத நிலையில் உலக அறிஞர்கள் மத்தியில் நிலைகொண்டிருப்பதே இப்பழமொழி ஆகும். மனிதனுக்கும் விலங்குக்கும் உடல் இருக்கிறது உயிர் இருக்கிறது. மனிதனும் விலங்கும் உடலையும் உயிரையும் கொண்டுள்ளவர்கள் என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு இடம் இல்லை. ஆனால் விலங்குகளுக்கு இல்லாத ஆறாவது அறிவு மனிதனுக்கு இருக்கிறது. இந்த ஆறாவது அறிவின் விளைவாக மெய்யியல், சமயம், இறையியல் முதலியன மனிதனால் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை உருவாக்கிய இந்த ஆறாவது அறிவுக்குக் காரணமான மனிதம் சமய உலகில் ஆன்மா என்று குறிக்கப்படுகிறது. மனிதனுக்கு மட்டுமே இருக்கும் ஆறாவது அறிவுக்குக் காரணமான ஆன்மாவைப் பற்றிய கல்வியே ஆன்மவியல் என்பது ஆகும். ஆன்மாவைப் பற்றிய தெளிவான விளக்கத்தை இலக்கணத்தில் கொடுத்திருக்கும் ஆன்மவியல் உலக மொழிகளில் தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழியிலும் இல்லை. தமிழ் மொழியும், தமிழர்களும் இன்று அடிமைப்பட்டுள்ள நிலையில் இருப்பதால், தமிழ் மொழியின் இலக்கணத்திலுள்ள ஆன்மவியலின் சிறப்பு உலக அறிஞர்களால் அறிந்து கொள்ள இயலாத நிலையில் மறைந்து கிடக்கின்றது. உலகம் இதை அறியவில்லை.இதன் காரணமாக உலகப் பொது மொழியாக விளங்கும் ஆங்கிலத்தில் ஆன்மவியல் என்பதைக் குறிக்கும் ஆங்கில மொழிச் சொல் இதுவரை உருவாக்கப்படவில்லை. இதனால் உயிருக்கும் ஆன்மாவுக்கும் வேறுபாடு தெரியாத நிலையில், உடல், உயிர், ஆன்மா ஆகிய மூன்றையும் கொண்டுள்ள மனிதனையும் சமப்படுத்திக் கூறும் தவறான ஆங்கிலப் பழமொழி இன்றும வழக்கில் இருக்கின்றது.
ஆன்மவியல் Soulologyஆன்மவியல் என்னும் தமிழ் இலக்கணம், ஆங்கில மொழிக்குக் கொடுக்கும் நன்கொடையாக "Soulology" என்னும் புதிய ஆங்கிலச் சொல் ஆங்கில மொழிக்கு இப்பொழுது கிடைக்கிறது. ஆங்கில மொழிக்குக் கிடைக்கும் இந்தப் புதிய வரவாகிய "Soulology" யின் செல்வாக்கு காரணமாக, "man is a soicial animal"என்னும் தவறான பழமொழி, படிப்படியாக வழக்கு இழந்து போகும் என்பதில் ஐயம் இல்லை. அதாவது விலங்குக்குச் சமமாக மனிதன் உண்ணப்பட்டு, விலங்கு வேட்டையாடப்படுவதைப் போன்று மனிதனும் வேட்டையாடப்படும் நிலை இன்று இருக்கிறது. இன்றைய உலக நிலை தமிழ் அலக்கணத்தின் ஆன்மவியலால் மாற்றி அமைக்கப்படும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. உலகை மாற்றி அமைக்கக் கூடிய தமிழ் இலக்கணத்தின் ஆன்மவியலை இப்பொழுது நோக்குவோம். தமிழ் இலக்கணம் கூறும் ஆன்மவியல் ஐந்து பகுதிகளை உடையது ¼வை வருமாறு (1) உடல் (2) உயிர் (3) ஆன்மா (4) கடவுள் (5) ஆணவமலம்
உடல் மேற்குறிப்பிட்ட ஐந்றது பகுதிகளில் உடல் அனைவராலும் எளிதில் அறிந்து கொள்ளக் கூடியது. அறிவியல் உடலை விளக்க முற்படுகிறது.
உயிர்இதுவரை வளர்ந்துள்ள நம்முடைய அறிவியல் உயிரைப் பற்றிய விளக்கத்தைக் கூற முற்படவில்லை. உயிரையுடைய மனிதனுக்கும், உயிரற்ற பிணத்திற்கும் வேறுபாடு வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் இன்றைய அறிவியல் உலகை விளக்க முற்படுகிறதேயன்றி உயிரை விளக்க முற்படவில்லை. அறிவியல் விளக்க இயலாத இடத்திலிருந்து மெய்யியல் தன் விளக்கத்தைத் தொடங்குகின்றது. மெய்யியல் உயிரை விளக்க முற்படுகிறது.
கடவுள் மெய்யியல் உயிரை விளக்க முற்படுவதைப் போன்று கடவுளை முழுமையாக விளக்க இயலவில்லை. கடவுளை விளக்க இன்னொரு கல்வி தேவைப்படுகிறது. மெய்யியலால் முழுமையாக விளக்க முடியாத இடத்திலிருந்து, இறையியல் தனது விளக்கத்தைத் தொடங்குகிறது. இன்றைய இறையியல், குறிப்பிட்ட ஒரு மதம் சார்ந்த புனித நூலை அடிப்படையாகக் கொண்டு, நம்பிக்கை சார்ந்த விளக்கத்தைக் கொடுக்கிறதேயன்றி மதங்களைக் கடந்து நிற்கும் கடவுளை விளக்கும் இலக்கண வடிவில் இன்றைய இறையியலின் விளக்கம் இல்லை.
ஆன்மாஉடலைப் பற்றி ஆராய்ந்து கூற முற்படும் அறிவியல், உயிரைப் பற்றி ஆராய்ந்து கூற முற்படும் மெய்யியல், கடவுளைப் பற்றி ஆராய்ந்து கூற முற்படும் இறையியல் ஆகிய இவை அனைத்தும் ஆறாவது அறிவையுடைய மனிதனால் உருவாக்கப்பட்டுள்ளவை. ஆறாவது அறிவுக்கு காரணமான மனிதம் அல்லது ஆன்மாவைப் பற்றி ஆராய்ந்து கூறும் ஆன்மவியல், இதுவரை உலகுக்குத் தெரியவில்லை என்பதைப் பார்த்தோம். இதற்கு காரணம் ஆன்மவியலை ஆழ்ந்து கூறும் தமிழ் இனமும் தமிழ் மொழியும் அடிமைப்பட்டு மறைந்து கிடக்கின்றமை ஆகும். இன்று உலகின் கண்களுக்கு மறைந்து கிடக்கும் தமிழ் மொழியின் இலக்கணத்திலுள்ள ஆன்மவியல் உண்மைகளை நோக்குவோம்.
1. மெய்யியல் நோக்கில் தமிழ் எழுத்துக்களின் பெயர்கள் தமிழ் மொழியின் இலக்கணத்திலுள்ள ஆன்மவியல் இலக்கணத்தைப் பார்ப்பதற்கு முன்னர் தமிழ் இலக்கணத்தின் முதல் பகுதியாக விளங்கும் தமிழ் எழுத்துக்களுக்கு, தமிழர்கள் கொடுத்துள்ள பெயர்களை நோக்குவோம். தமிழ் எழுத்துக்களுக்குப் பெயர்கொடுத்துள்ள தமிழர்கள்1. உயிர் எழுத்து என்றும் 2. உடல் எழுத்து அல்லது மெய் எழுத்து என்றும் 3. உயிரும் உடலும் இணைந்து நிற்கும் உயிர்மெய் எழுத்து என்றும் மெய்யியல் நோக்கில் பெயர் கொடுத்திருக்கும் பாங்கு எண்ணி மகிழத்தக்கது. மெய்யியல், இறையியல் ஆகிய இரண்டும் ஆன்மவியலில் அடங்குகின்றன. ஏனெனில் ஆன்மாவையுடைய மனிதனே இவை இரண்டையும் ஆராயும் ஆறாவது அறிவைப் பெற்றுள்ளான்.
2. திணை இலக்கணம் திணை என்பது ஒழுக்கத்தைக் குறிக்கிறது. உயர்ந்த ஒழுக்கத்திற்கு வழி நடத்துவது ஆறாவது அறிவு. ஆறாவது அறிவையுடைய மனிதனும் கடவுளும் உயர்ந்த ஒழுக்கத்திற்கு உரியவர்கள். இதனால் மனிதனையும் கடவுளையும் உயர்திணை என்னும் பிரிவில் தமிழ் இலக்கணம் அடக்குகிறது. ஆறாவது அறிவு இல்லாத, உயிரினங்களையும் உயிரற்றவற்றையும், அஃறிணை (உயர்திணை அல்லாதவை) என்னும் பிரிவில் தமிழ் இலக்கணம் அடக்குகிறது. ஆறாவது அறிவை அடிப்படையாகக் கொண்டு பகுக்கப்பட்டிருக்கும் திணை இரக்கணம் உலக மொழிகளில், தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழியிலும் இல்லை இன்று உலகப் பொது மொழியாக விளங்கும் ஆங்கிலத்திலும் இல்லை. இது ஏன்? என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது. எழுதப்படுவது - எழுத்து எழுத்துகளின் இணைப்பு - சொல் சொல்லில் இருக்க வேண்டியது - பொருள் பொருளுள்ள சொற்களின் இணைப்பு - யாப்பு யாப்பிற்குச் சிறப்பு - அணி ஒரு மொழிக்கு இருக்க வேண்டிய இலக்கணப் பிரிவுகள், எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, என்னும் ஐந்து ஆகும். உலக மொழிகளில் தமிழ் மொழி மட்டுமே இந்த ஐந்து பிரிவு இலக்கணங்களையும் கொண்டு முழுமையாக விளங்குகின்றது. தமிழ் தவிர மற்ற உலக மொழிகள் அனைத்தும் ஐந்து இலக்கணப் பிரிவுகளில் ஒன்று குறைந்து நான்கு இலக்கணப் பிரிவுகளை மட்டுமே உடையனவாக விளங்குகின்றன. தமிழ் மொழியில் மட்டுமே உள்ள, மற்ற உலக மொழிகளில் இல்லாத அந்த ஒரு பிரிவு எது? அந்தப் பிரிவே பொருள் இலக்கணம் ஆகும.
3. பொருள் இலக்கணம் பொருள் இலக்கணம் இரு பிரிவுகளையுடையது. (1) அகப்பொருள் அல்லது அகத்திணை (2) புறப்பொருள் அல்லது புறத்திணை ஆறாவது அறிவையுடைய மனிதர்களால் உள்ளத்தில் அனுபவிக்கப்படுவதும், இஃது இன்னவாறு இருந்தது என்று புறத்தே எடுத்துச் சொல்லி நிலைநாட்டக் கூடாததுமான பொருள் அகப் பொருள் என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது. ஆறறிவையுடைய ஆன்மாவும் கடவுளும் இணைந்து இன்புறும் பேரின்ப நிலை தமிழ் மொழியில் அகப் பொருள் இலக்கணத்தில் உணர்த்திக் காட்டப்படுகிறது. பைபிளிலுள்ள உன்னதப்பாட்டு திருக்குறளிலுள்ள இன்பத்துப்பால் மாணிக்கவாசகரின் திருக்கோவையார் இராமலிங்க அடிகளாரின் ஆறாம் திருமுறை ஆகிய பேரின்ப இலக்கியங்களுக்கு இலக்கணம் கூறும் பகுதி தமிழ் மொழியிலுள்ள பொருள் இலக்கணத்தின் அகத்திணையைக் கூறும் அகப்பொருள் ஆகும். அதாவது, உலகிலுள்ள மொழிகளில் மனிதன் கடவுளோடு பெறும் அனுபவத்தை இலக்கியத்தில் மட்டுமல்லாது, இலக்கணத்தில் வரையறுத்துக் கூறும் தகுதியைப் பெற்றிருக்கும் மொழி தமிழ் ஒன்றே என்றாகிறது.
4. ஆன்மவியல் உலகிலுள்ள மொழிகள் உயிதைப் பற்றி ஆராயும் மெய்யியலையும், இறைவனைப் பற்றி ஆராயும் இறையியலையும் கொண்டு விளங்குகின்றன. தமிழில் மட்டுமே, உயிரைப் பற்றியும், இறைவனைப் பற்றியும் ஆராயும் ஈஆற்றலையுடைய ஆறாவது அறிவுக்குக் காரணமான மனிதம் அல்லது ஆன்மாவைப் பற்றிய தெளிவான ஆராய்ச்சியையுடைய ஆன்மவியல் இருக்கிறது. அதாவது மற்ற உயிரினங்களைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் ஆராயும், தன்னிடமுள்ள குறைகளிலிருந்து விடுதலை பெற்று நிறைவு பெறும் நிலையை எண்ணிப் பார்க்காமல் இருப்பானானால், அவனுடைய மற்ற ஆராய்ச்சிகளால் அவனுக்குப் பயன் என்ன? ஒரு பயனும் இல்லை அல்லவா? இதனால் ஆன்மவியலைப் பற்றி அறியாத மெய்யியலும், இறையியலும் முழுமை பெறாதவைகளாக இதுக்கின்றன. இதன் காரணமாகவே இன்றைய மனித சமுதாயம், உலகில் எத்தனையோ மதங்கள் இருந்தும், மெய்யியல், இறையியல் ஆராய்ச்சிகள் இருந்தும், தன்னையும் தன்னைப் படைத்த இறைவனையும் சரியாக உணர இயலாமல் நிலை தடுமாறிக் கொண்டிருக்கிறது. நிலை தடுமாறி நிற்கும் இன்றைய மனித சமுதாயத்தின் தேவை, மனிதன் தன்னைப் பற்றி அறியும் ஆன்மவியல் அறிவு ஆகும். மனிதன் தன் உடலைப் பற்றியும்,தன் உடலை அழியாமல் பாதுகாக்குப்படும் தன் உடலைப் பயன்படுத்தித் தன் விருப்பங்களை நிறைவேற்றும மனிதம் அல்லது ஆன்மா பற்றியும், ஆன்மாவாகிய தன்னைப் படைத்த கடவுளை அறிய இயலாமல் தன்னைத் தடுக்கும் தன்னுடைய ஆணவமலத்தைப் பற்றியும், ஆணவமலயத்திலிருந்து தன்னை விடுவிக்கும் கடவுளைப் பற்றியும் அறிவதற்கு வழிநடத்துவதே ஆன்மவியல் ஆகும். இந்த ஐந்தையும் தருக்கவியல், அறிவியல் அடிப்படையில் விளக்குவது ஆன்மவியல் மொழியாகிய தமிழ் மொழியிலுள்ள ஆன்மவியல் இலக்கண நூலாக விளங்குவது சிவஞானபோதம். அன்பு எனும் குணம் தமிழில் சிவம் என்று அழைக்கப்படுகிறது. அன்புடைய கடவுளைப் பற்றிய ஞானத்தை ஆன்மா அறியுமாறு ஆன்மாவுக்குப் போதிப்பது = சிவஞானபோதம். உலக சமயங்களில் அனைத்திற்கும் பொதுவான ஆன்மவியல் நூல். உலக சமயங்களின் புனித நூல்கள் அனைத்தையும் இலக்கியமாகக் கொண்டு, அவ்விலக்கியங்களின் சாரமாகிய இலக்கணமாக விளங்குவதே சிவஞானபோதம் கூறும் ஆன்மவியல்.
5. ஆன்மவியல் மொழி கடவுள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்? எனும் கேள்வி எழுப்பப்படுமானால் மதங்களைக் கடந்தவர் கடவுள், அவர் எந்த மதத்திற்கும் உட்பட்டவர் அல்லர் அனைத்து மதங்களும் கடவுளை அறிய முயலுகின்றன என்பதே பதிலாக அமைகிறது. அப்படியானால் கடவுளை உணர்ந்த மக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்? என்னும் கேள்வியை எழுப்பினால் அனைத்து மதங்களும் அவர்களுடைய மதங்களே என்பதும், அனைத்து மதங்களையும் அரவணைப்பவர்களே அவர்கள் என்பதும் பதிலாக அமைகிறது. இந்த நிலையில் அனைத்து மதங்களையும் அரவணைக்கும், எல்லா மதங்களுக்கும் பொதுவான அகப் பொருள் இலக்கணம் உடையதாகத் தமிழ் மொழி விளங்குகிறது என்பதை நாம் புரிந்து கொள்கின்றோம். அனைத்து மதங்களையும் அரவணைக்கும், அனைத்து மதங்களுக்கும் பொதுவான அகப்பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே இருப்பதற்குக் காரணம், தமிழ் மொழி ஒரு ஆன்மவியல் மொழியாகும். ஆன்மவியல் மொழிக்கு குறிப்பிட்ட மதச் சார்பு கிடையாது. அதனால் ஆன்மவியல் மொழியாகிய தமிழில் சமணம், பெளத்தம், கிறித்தவம், சைவம், வைணவம், இசுலாம் ஆகிய உலகப் பெரும் சமயங்கள் அனைத்திற்கும் காப்பியங்கள் இருக்கின்றன. இவ்வாறு உலகப் பெரும் சமயங்கள் அனைத்திற்கும் காப்பியங்களைக் கொண்டுள்ள மொழி, உலகில் தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் இல்லை. இதனால் தமிழ் மொழி ஆன்மவியல் மொழியாக விளங்குகிறது என்பதில் ஐயம் இல்லை. மெய்யியல், இறையியல் ஆகிய இரண்டும் உலக சமயங்களின் பகுதிகளாக விளங்குகின்றன. உலக சமயங்களின் பகுதிகளாக விளங்குகின்றன. உலக சமயங்களின் பகுதிகளான மெய்யியலாலும், இறையியலாலும் முழுமையாக விளக்க இயலாத ஆன்மவியல் உண்மைகளைத் தமிழ் மொழி விளக்குகிறது என்றால், இது தமிழர் சமயத்தின் பகுதியாக விளங்குகிறது என்பது பெறப்படுகிறது.
6. தமிழர் சமயம் திணை இலக்கணம் பொருள் இலக்கணம், ஆன்மவியல் இலக்கணம் ஆகியவறிறைத் தன்னகத்தே கொண்டுள்ள ஆன்மவியல் மொழியாக உலக மொழிகளில் தமிழ் மொழி மட்டுமே விளங்குகின்ற தன்மையைப் பார்த்தோம். மெய்யியல், இறையியல் ஆகிய இரண்டும் உலக சமயங்களின் பகுதிகளாக விளங்குகின்றன. உலக சமயங்களின் பகுதிகளான மெய்யியலாலும், இறையியலாலும் முழுமையாக விளக்க இயலாத ஆன்மவியல் உண்மைகளைத் தமிழ் மொழி விளங்குகிறது என்றால், இது தமிழர் சமயத்தின் பகுதியாக விளங்குகிறது என்பது சொல்லாமலே புரியக் கூடிய ஒன்றாகும். தமிழர் சமயத்தின் ஆன்மவியல், உலக சமயங்களின் சாரமாக விளங்குவதால், உலக சமயங்களின் பொதுப் பெயராகத் தமிழர் சமயம் என்பது விளங்குகிறது. தமிழர் சமயத்தின் வளர்ச்சிப்படி நிலைகள் ஏழனையும் ஆராந்தால், உலக சமயங்கள் அனைத்தையும் இணைத்துத் தமிழர் சமயம் வளர்ந்துள்ள வரலாறு தெளிவாகத் தெரியும்.ஆகவே, உலக சமயங்கள் அனைத்தையும் இணைத்து நிற்கும் பொதுப் பெயராகத் தமிழர் சமயம் விளங்குவதைத் தமிழர் சமய வரலாறு தெளிவாகக் காட்டுகிறது. இதனாலேயே தமிழர் ஆன்மவியல் இலக்கணத்தைக் கூறும் சிவஞானபோதம், ஆதிப் பெற்றோரின் தோற்றம் தொடங்கி, அது எழுதப்பட்ட கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை உலகில் தோன்றிய அனைத்துச் சமயங்களின் சாரமாக விளங்குகிறது. கடவுள் எவ்வாறு அனைத்து மதங்களுக்கும் பொதுவானவராக விளங்குகின்றாரோ, அவ்வாறே ஆன்மவியல் மொழியாகிய தமிழ் மொழியும், தமிழ் மொழியில் உருவான தமிழர் சமயமும், தமிழர் சமயத்தில் உருவான தமிழர் ஆன்மவியல் இலக்கணமும் உலகிலுள்ள அனைத்து மதங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக விளங்குகின்றன.
7. உணர்த்த உணர்தல் இத்துணை சிறப்புடைய தமிழ் மொழியும் தமிழ் இனமும், ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அடிமைப்படுத்தப்பட்டு, நசுக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு, 1. தமிழ் மொழி ஒரு நீச மொழி - என்றும் 2. தமிழ் இனம் ஒரு நீச இனம் - என்றும் 3. தமிழ் மொழியும் தமிழ் இனமும், தமிழ் நாட்டுக் கோவில் கருவறையில் கால் வைக்கத் தகாத இழி பிறவிகள் என்றும் இகழப்படும் கொடுமை தமிழ் மக்கள் அதிகம் வாழும் தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் தமிழர்கள், தங்கள் இனத்தின் சிறப்பை உணரவில்லை. தங்கள் மொழியின் சிறப்பை உணரவில்லை. தங்கள் ஆன்மவியல் சிறப்பை உணரவில்லை. தங்கள் சமயமாகிய தமிழர் சமயத்தையும் அதன் சிறப்பையும் உணரவில்லை. தமிழர்கள் தன்னுணர்வில்லா அடிமைகளாக வாழ்வதில் சுகம் கண்டு கொண்டிருக்கும் கொடிய அடிமைத்தனத்தில் இருக்கின்றார்கள். இதற்குக் காரணம் ஆணவமலம் இவர்களை முழுமையாக ஆட்கொண்டிருக்கிறது. இவர்களை விடுவிப்பது யார்? தன்னை உணர இயலாத நிலையில் ஆணவமலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆன்மாவை, இறைவன் குருவாக வந்து தம்முடை ய தவத்தால் உணர்த்துகின்ற காரணத்தால், உணர்த்த உணர்ந்து தன் அடிமைத் தளையிலிருந்து விடுதலைஅடைகிறது ஆன்மா என்பது தமிழர் ஆன்மவியலைக் கூறும் சிவஞானபோதம் உணர்த்தும் உண்மையாகும். இந்த உண்மையின்படி இறைவன் உணர்த்த தமிழர்கள் உணர்ந்து விடுதலையடையும் காலம் நெருங்கி விட்டது என்பதற்கு, மறைந்து கிடந்த ஆன்மவியல் உண்மைகளை, கடவுள் வெளிவரச் செய்திருப்பதே எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
8. பெற்றோரும் பிள்ளைகளும்தமிழ் மொழியும் தமிழர் ஆன்மவியல் கொள்கைகளும தமிழர் சமயமும் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானவை. பெற்றோர் பிள்ளைகளை ஒன்றிணைத்து அரவணைப்பதைப் போன்று, தமிழ் இனமும், தமிழ் மொழியும், தமிழர் ஆன்மவியல் கொள்கையும், தமிழர் சமயமும் உலக மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அரவணைப்பவை என்பதை யாதும் ஊரே, யாவரும் கேளிர் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்னும் தமிழர் கொள்கைகள் உலகுக்கு வெளிப்படுத்துகின்றன.
9. இயக்கமும் மாநாடும் தமிழர் கொள்கைக்கு அடிப்படையாக விளங்கும் தமிழர்களின் ஆன்மவியல் சிறப்புகளை உலகெங்கும் பரப்புவதற்கு உருவாக்கப்பட்டிருக்கும் அமைப்பே, உலகத் தமிழர் என்னும் பெயரில் உலக மக்களை எல்லாம் ஒன்றிணைக்கும் உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்கம் ஆகும். உலகத் தமிழர் ஆன்மவியல் கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில், தமிழர் சமய உலக முதல் மாநாடு தமிழ் நாட்டின் தலைநகராகிய சென்னையில் 2008 ஜனவரி 13 முதல் 16 வரை பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்பட இருக்கிறது. உலகிலுள்ள அனைத்துச் சமயங்களின் பொதுப் பெயரே தமிழர் சமயம் என்பதைப் பார்த்துள்ளோம். உலக சமயங்களில், உலகளாவிய தலைமையைக் கொண்டுள்ளதும், மற்ற சமயங்களிலும் உண்மையுள்ளது என்பதை ஏற்றுக் கொண்டிருப்பதும், மற்ற சமய அறிஞர்களுடன் கலந்துரையாடல் நடத்து மறைந்து கிடக்கும் உண்மைகளை வெளிக் கொண்டு வந்து சமய ஒருமைப் பாட்டை வளர்த்து வருவதுமான கத்தோலிக்கத் திருச்சபையின், உலகத் தலைவராகிய போப்பாண்டவரின் கீழ் இயங்கும் தமிழகத்தின் தலைமையிடமாகிய சென்னையில் உள்ளதுமான சென்னை - மயிலை கத்தோலிக்கப் பேராயத்தின் துணையுடன் இணைந்து இம்மாநாடுநடத்த திட்டமிடப்பட்டு, 2007 மே மாதம் 15 முதல் 19 வரை மாநாட்டில் கட்டுரை படிக்க விரும்பும் பல்கலைக் கழகங்களின் அறிஞர்களுக்குத் தமிழர் சமய அறிமுகக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. தமிழர் சமய மாநாடு சிறப்புற நடைபெறுவதற்குத் துணை நிற்க விரும்புகின்ற, மற்ற மதங்களிலும் உண்மை உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளும் அனைத்துச் சமய அமைப்புகளும் வரவேற்கப்படுகின்றன.


மேலும் விவரங்களுக்கு,
உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்கம்,
278, கொன்னூர் நெடுஞ்சாலை,
அயன்புரம், சென்னை - 600 023.